செய்திகள் :

தருமபுரி : வீடுகளுக்குள் படையெடுத்து வரும் எறும்புகள்! - நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்

post image

படையெடுத்து வரும் எறும்புகளால் வீட்டில் இருக்க முடியாமல், சாப்பிட முடியாமல், நிம்மதியாக உறங்க முடியாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வேதனையுடன் கழித்து வருகிறார்கள் முள்ளிக்காடு கிராம மக்கள்.

எங்கெங்கும் எறும்புகள்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே வாணியாறு பகுதியை ஒட்டியுள்ளது முள்ளிக்காடு கிராமம். இங்கு 300 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியிலுள்ள பாக்கு மரங்களில் மொய்க்க ஆரம்பித்த சிவப்பு எறும்புகள், நாளடைவில் அதிகரித்து அருகிலுள்ள முள்ளிக்காடு குடியிருப்பு பகுதிகளுக்குள் வரத் தொடங்கின. தெருக்களில் பெருகிய லட்சக்கணக்கான எறும்புகள், பின்பு ஒவ்வொரு வீட்டுக்குள் புகுந்து அனைத்துப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

சிவப்பு எறும்புகள்

சாதாரண எறும்புகள் போலில்லாமல் சாரை சாரையாக வந்த சிவப்பு எறும்புகளால் மக்கள் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். வீட்டுக்குள் அமர முடியாமலும், இரவில் உறங்க முடியாமலும் எறும்புக்கடியால் கிராம மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து ஊராட்சி மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க, ஊருக்குள் வந்து பார்வையிட்டவர்கள், பின்பு வேளாண்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியாளர்களை அழைத்து வந்து ஆய்வு செய்ததில் அப்பகுதியிலுள்ள பாக்கு மரங்களைத் தேடி வரும் எறும்புகள்தான் கிராமத்துக்குள்ளும் பெருகி வருவதாக தெரிவித்தனர். ஆனால், இதை அழிப்பதற்கு எந்த மாற்று வழியும் உருவாக்காமல் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டே இருப்பதாக கிராம மக்கள் புகார் எழுப்புகிறார்கள்.

"குடிநீர், உணவு என அனைத்திலும் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருப்பதால் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை, ஓய்வெடுக்க முடியவில்லை, எறும்பு கடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வருகின்ற நிலைமை ஏறட்டுள்ளது. இதை விரட்ட எறும்புப் பொடிகளையும், மருந்து சாக்பீஸ்களையும் பயன்படுத்தியும் எந்தப் பலனும் இல்லை, அதையும் மீறி எறும்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது" என்று ஆதங்கத்துடன் தெரிவிக்கும் கிராம மக்கள், "இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஊரை காலி செய்துவிட்டு போவதைத் தவிர வேறு வழியில்லை" என்று வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனைக்கு விரைந்து ஒரு தீர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும்.

Doctor Vikatan: லோ BP பிரச்னை... உணவுகளின் மூலம் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. பல வருடங்களாகலோ BP பிரச்னை இருக்கிறது. இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை. உப்பை அதிகரிப்பது போல உணவின் மூலம் இந்தப் பிரச்னையைச் சரியாக்க முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க

Doctor Vikatan: டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் மனைவிக்கு நீரிழிவு உள்ளது. அவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. டயாபட்டீஸ் இருந்தால் இப்படித்தான் அடிக்கடி தொற்றுநோய்கள் பாதிக்கும் என்கிறார்களே, அப்படியா? அதைத் தவிர்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் ஆபத்தானவையா... தொற்றைப் பரப்புமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் இரண்டு நாய்களும், மூன்று பூனைகளும் வளர்க்கிறோம். வீட்டில் வளர்த்தாலும், செல்லப்பிராணிகளால் தொற்றுநோய்கள் பரவும் என்கிறார்கள் சிலர். இது எந்த அளவுக்கு உண்மை... செல்லப் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: 50 வயதில் மலச்சிக்கல்... மருந்து எடுத்தால் மட்டுமே தீர்வு; நிரந்தரமாகிவிடுமோ?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அது ரொம்பவும் தீவிரமாகும்போது மட்டும் மருந்து எடுத்துக்கொள்வேன். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் எடை அதிகரிப்பும் இருக்குமா.... மருந்து எட... மேலும் பார்க்க

கருவிலேயே சிசுவுக்கு அறுவை சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!

இந்திய மருத்துவ வரலாற்றில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாயின் கருப்பைக்குள் 25 வாரக் கருவாக இருந்த சிசுவுக்கு, கடுமையான முதுகுத் தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்யும் ஆறு மணி... மேலும் பார்க்க

Doctor Vikatan: மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராதா?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் மீன் எண்ணெய் மாத்திரை எடுத்துக்கொள்கிறார். அது தவிர, ஒருநாள் விட்டு ஒருநாள் பூண்டும் சாப்பிடுகிறார். இவை இரண்டையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், ஹார்ட் அ... மேலும் பார்க்க