செய்திகள் :

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல - அமைச்சர் நிர்மல்குமார்

post image

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் தொடர்ந்து. அவர் பேசும்போது, ``மாணவர்கள் போராட்டத்தில் நமது நிலைப்பாடு ஏற்கனவே சொன்னது போல்  டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தோம். நீட் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தரும்.

அதனால் எந்த பயனும் இல்லை, நீட் வேண்டாம் என்பது தான் நமது நிலைப்பாடு. போராட்டத்தில் நிறைய கோரிக்கைகள் உள்ளது. டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும். நம்முடைய நிலைப்பாடு நீட் வேண்டாம்... தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும், ஒரு சிலர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் போராடுகிறார்கள்.

அமைச்சர் நிர்மல்குமார்

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நம்முடைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல... நம்முடைய கோரிக்கை நீட் வேண்டாம். அவர் பதவி விலகினாலும் நீட்  தொடரும். 

நீட்டுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள், இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது. அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள் தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து.

இப்போது இறங்கி மேடையில் பேசுகிறார்கள். நீட் தேர்வை பற்றி பேசும் தகுதி திமுகவினருக்கு கிடையாது. நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளோம். நேரமும் காலமும் வரும்போது அதற்கான முதல் குரலாக நம்மளுடைய குரல் இருக்கும். 

மேகதாது விவகாரத்தில் கடந்த ஒரு மாதமாக முதல்வர் பல கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். என்ன செய்ய வேண்டுமோ அதை ஆக்கபூர்வமாக செய்ய வேண்டும். திமுக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு பின்னர் துரோகம் செய்தது போல் விஷயங்கள் இருக்காது.

மேகதாது
மேகதாது

விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டும். அதேசமயம் நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் வலிமையாக எடுப்பார். நம்மை தவிர வேற யாரும் எடுக்கவும் முடியாது 

விவசாய காப்பீடுகளுக்காக கடந்த 15 வருடங்களாக மிகவும் மோசமாக விவசாயிகள் அலைக் கழிக்கபட்டுள்ளனர்.

2006 க்கு பிறகு காப்பீடுகள் சரியாக விவசாயிகளுக்கு போய் சேரவில்லை. அதனை சீரமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. எவ்வளவு விவசாயிகள் காப்பீடு பெற்றுள்ளார்கள் என்ற விவரம் சரியாக இல்லை அதை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு என்ன தேவையோ அது முதல்வர் வாயிலாக கிடைக்கும்.

மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக தமிழக அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை துவக்க வேண்டும். அதேபோல் மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யும் பணியும் துவக்கி உள்ளோம்." என்றார்.

’திரையரங்குகளில் அமைச்சர்கள் கண்ணீர் விட்டது ஏன்?’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்!

கோவை வ.உ.சி மைதானம் அருகில் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம், கபடி உள் விளையாட்டு அரங்கம், வாலிபால் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பிற்படுத்தபட்ட... மேலும் பார்க்க

'இனி சீர்திருத்தங்களை நோக்கி..!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமாவிற்கு சோனம் வாங்சுக் பதிவு

வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, 26 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் இந்திய செயற்பாட்டாளர் சோனம் வ... மேலும் பார்க்க

தர்மேந்திர பிரதான் விலகல்: 'கரப்பான் பூச்சிகள் வென்றன; இன்னும் 2 கோரிக்கைகள் நிலுவை' - CJP Reactions

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் காக்ரோச் ஜனதா கட்சிக்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது.தர்மேந்திர பிரதான் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் மோடிக்கு கடித... மேலும் பார்க்க

CJP Protest: `நாம் சாதித்து விட்டோம்!' - தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அபிஜீத் திப்கே

மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சி.ஜே.பி (CJP) அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே வரவேற்று பேசியிருக்கிறார்.தர்மேந்திர பிரதான்இது குறித்து அவர... மேலும் பார்க்க

"த.வெ.க-விடம் காங்கிரஸுக்கு உரிய இடங்களைக் கேட்டு பெற்று போட்டியிடுவோம்!" - அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற உற்சாகத்தில், கட்சிப் பணிகளில் வேகம் காட்டி வருகிறது சத்திய மூர்த்தி பவன். அண்மையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' ... மேலும் பார்க்க

"இனி என்னிடம் அரசியல் பேசாதீர்கள்; அன்புமணி.!" - அரசியலில் இருந்து விலகிய ராமதாஸ்

2024-ம்‌ ஆண்டு டிசம்பர் மாதம் பாமகவின் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததில் தொடங்கியது ராமதாஸ், அன்புமணி மோதல்.பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் முகுந்தன். அக்கா மகனுக்கு கட்சியில் உடனடியாக ப... மேலும் பார்க்க