செய்திகள் :

தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே

post image

சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் பெயர் மீண்டும் ஒருமுறை உலகக் கால்பந்து வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

2026 FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு எதிராக இரண்டாவது பாதியில் கோல் அடித்து அசத்திய எம்பாப்பே, இதன் மூலம் உலகக் கோப்பை அரங்கில் 30 வயதுக்கு முன்பாக 20 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தடுமாறின. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் தொடர் முயற்சிகளுக்குப் பலன் கிடைத்தது.

கேப்டன் எம்பாப்பே அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இது இந்த உலகக் கோப்பையில் அவரது 8-வது கோலாகும். இதன்மூலம், கோல்டன் பூட் பந்தயத்தில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியுடன் சமநிலைக்கு வந்துள்ளார்.

மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் 20 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராகவும் அவர் உருவெடுத்துள்ளார். அவருக்கு முன்னாள் 21 கோல்களுடன் மெஸ்ஸி மட்டுமே இந்த பட்டியலில் உள்ளார். ஆனால், 27 வயதிலேயே எம்பாப்பே இந்த சாதனையை எட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால், இந்த வரலாற்றுச் சாதனை அவ்வளவு எளிதாக அவருக்குக் கிடைத்துவிடவில்லை. போட்டியின் முதல் பாதியிலேயே பெனால்டி வாய்ப்பு மூலம் கோல் அடிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை எம்பாப்பே பெற்றார். மொராக்கோ வீரர் நௌசைர் மஸ்ரௌயி செய்த ஃபவுலால் இந்த பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால், 12 யார்டில் இருந்து எம்பாப்பே அடித்த பலவீனமான ஷாட்டை, மொராக்கோ கோல்கீப்பர் யாசின் பௌனௌ அபாரமாகத் தடுத்து நிறுத்தினார். இந்த பெனால்டி முடிவும்கூட சற்று சர்ச்சைக்குள்ளானது. ரீப்ளேக்களில், மஸ்ரௌயி தொடுவதற்கு முன்பாகவே எம்பாப்பே கீழே விழுந்தது போலத் தெரிந்தது.

அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ்!

பெனால்டியை தவறவிட்டாலும், தன் மீதான அழுத்தத்தை உதறித்தள்ளி, இரண்டாவது பாதியில் கோல் அடித்து அணிக்கு உயிர் கொடுத்தார் எம்பாப்பே. அதோடு அவர் நிற்கவில்லை. போட்டியின் இரண்டாவது கோலுக்கு அவர்தான் அசிஸ்ட் செய்தார். அவர் கொடுத்த பாஸை, பலோன் டி'ஓர் வென்ற சக வீரர் உஸ்மான் டெம்பேலே கோலாக மாற்ற, பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கடந்த 2022 கத்தார் உலகக் கோப்பை அரையிறுதியிலும் இதே மொராக்கோ அணியை 2-0 என்ற கணக்கில்தான் பிரான்ஸ் வீழ்த்தியது. தற்போது இந்த வெற்றியின் மூலம், நடப்பு உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. டல்லாஸில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் அணியை பிரான்ஸ் எதிர்கொள்ளும்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் முனைப்பில் பிரான்ஸ் உள்ளது. நீண்டகாலப் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை என்பதால், கோப்பையுடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்க பிரான்ஸ் வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

2018-ல் சாம்பியன், 2022-ல் ரன்னர்-அப் என அசத்திவரும் பிரான்ஸ், இந்த முறையும் எளிதாக அரையிறுதி வரை முன்னேறியுள்ளது. காயமடைந்த இஸ்மாயில் சைபாரி இல்லாததால், மொராக்கோ அணியின் தாக்குதல் பலவீனமாக இருந்தது பிரான்ஸ் அணிக்குச் சாதகமாக அமைந்தது.!

FIFA: பழிதீர்க்குமா மொராக்கோ? இங்கிலாந்தை வீழ்த்துவாரா ஹாலண்ட்? - அனல் அடிக்கும் காலிறுதி ஆட்டங்கள்!

கடைசி நிமிட கோல்கள், அதிர்ச்சித் தோல்விகள், நம்பமுடியாத கம்பேக்குகள், ஜாம்பவான்களின் கண்ணீருடன் கூடிய பிரியாவிடை என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்ற... மேலும் பார்க்க

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! - பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தி... மேலும் பார்க்க

`உலகக்கோப்பையில் மெஸ்ஸி நீடிக்க எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!' - எகிப்து கோச்'சின் நேரடி குற்றச்சாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்ச... மேலும் பார்க்க

FIFA-வின் செல்லப் பிள்ளையா அர்ஜென்டினா? - எகிப்துக்கு எதிரான தீர்ப்புகளால் கொந்தளிக்கும் ரசிகர்கள்!

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, எகிப்துக்கு எதிராக 3-2 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி நிமிடங்களில் அரங்கேறிய இந்த அசாத்... மேலும் பார்க்க

மெஸ்ஸி மேஜிக்; கடைசி 11 நிமிடங்கள்... 0-2 பின்னடைவில் இருந்து அர்ஜென்டினா மீண்டது எப்படி?

கிட்டத்தட்ட வெளியேறிவிடும் என்ற நிலையில் இருந்து, நம்ப முடியாத ஒரு சரிவிலிருந்து மீண்டு வந்துள்ளது நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா. செவ்வாய்க்கிழமை அட்லாண்டாவில் நடந்த ஃபிஃபா உலகக் கோப்பை 2026 காலிறுதிக்... மேலும் பார்க்க

Ronaldo: `கால்பந்து எல்லாவற்றையும் கொடுத்தது... அவர் விரும்பிய ஒன்றை தவிர.! - கலங்கி நின்ற ரொனால்டோ

ஆட்டத்தின் இறுதி விளிம்பில் விசில் ஊதப்பட்டதும், கண்கள் கலங்க, கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது உலகக் கோப்பை சட்டையில் கடைசி முறையாக மைதானத்தில் நின்றிருந்த ரசிகர்களைப் பார்த்து கைகாட்டினார். திங்களன்று இரவ... மேலும் பார்க்க