செய்திகள் :

தவெகவில் இணைந்ததும் பதவி; ஒன்றரை ஆண்டுகளில் எம்.எல்.ஏ - கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ் பின்னணி என்ன ?

post image

அ.தி.மு.க தன்னுடைய கோட்டையாகக் கருதும் தொகுதிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி. தன்னுடைய வலுவான வாக்கு வங்கியால் 2011, 2016, 2021 என தொடர்ச்சியாக தொகுதியை தக்க வைத்து வந்தது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் ராஜீவ்காந்தியும், தி.மு.க கூட்டணி சார்பில் வி.சி.க-வைச் சேர்ந்த மாலதியும், நா.த.க சார்பில் நாகம்மாளும், த.வெ.க சார்பில் அருள் விக்னேஷும் களம் கண்டனர். த.வெ.க புதிய கட்சி என்பதால், வாக்குப் பதிவு நடைபெற்ற அன்றைய தினம் வரை களம் அ.தி.மு.க - வி.சி.க என்ற நிலையில்தான் அனைவராலும் பார்க்கப்பட்டது.

முதல் பத்து சுற்றுகள் வரை அ.தி.மு.க-வும், வி.சி.க-வும் மாறி மாறி முன்னணியில் இருந்த நிலையில், மூன்றாவது இடத்தில் வந்து கொண்டிருந்தார் அருள் விக்னேஷ். அதன்பிறகு இருவரையும் பின்னால் தள்ளி முன்னேறிய அவர், 81,132 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 798 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜீவ்காந்தியை வீழ்த்தினார் அருள் விக்னேஷ்.

தவெக விஜய்
தவெக விஜய்

சின்னசேலம் ஒன்றியம் மூங்கில்பாடி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட அருள் விக்னேஷ், தற்போது கள்ளக்குறிச்சி கச்சிராப்பாளையத்தில் வசித்து வருகிறார். முதுகலைப் பட்டம் முடித்த இவர், கள்ளக்குறிச்சியில் டென்னிஸ் விளையாட்டு மைதானம் வைத்து நடத்தி வருகிறார்.

வேட்பு மனுவில் ரூ.1.2 கோடி சொத்து மதிப்பை காட்டியிருக்கும் இவர், 43.5 லட்சம் கடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விஜய் த.வெ.க-வை தொடங்கியவுடன் கட்சியில் இணைந்து மாவட்ட மாணவரணி பதவியைப் பெற்ற அருள் விக்னேஷ், அதே வேகத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட்டையும் பெற்றார்.

கட்சியில் சீனியர்கள் இருந்தும் அருள் விக்னேஷுக்கு பதவியும் சீட்டும் உடனே கிடைக்கக் காரணம், அவரது பொருளாதார பலம். அ.தி.மு.க-வும், வி.சி.க-வும் அசுர வேகத்தில் பிரசாரத்தை முன்னெடுத்த நிலையில், பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை த.வெ.க தரப்பு. நகர்ப்புறங்களில் கூட பெரிதாக பிரசாரத்திற்குச் செல்லவில்லை. ஆனாலும் விஜய் அலை இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியிருக்கிறது.

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க

'எதிர்க்கட்சியினருக்கு அநீதியாகிவிடும்'னு சொன்னவரு ஸ்டாலின், அதனால்.!'- சி.எஸ் அமுதன் சொல்வது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவி... மேலும் பார்க்க

'திராவிட கட்சிகள் திருமாவை முதல்வராக முன்மொழிய வேண்டும்' - புது ரூட்டில் சிந்தனைச் செல்வன்

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டமன்றம் தான் அமைய உள்ளது. பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக, பெரும்... மேலும் பார்க்க

தவெக ஆதரவுக்காக உடைகிறதா அதிமுக? – எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் குவிந்த பின்னணி என்ன?

த.வெ.க ஆதரவுக்காக வெடித்த கோஷ்டி மோதல்!தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வை வீழ்த்தி த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், அந்தக் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க... மேலும் பார்க்க