செய்திகள் :

"தவெக அரசின் அலட்சியத்தால் கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன" - ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தவெக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

இந்நிலையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் பட்டியலின் விளக்கப்படத்தைக் குறிப்பிட்டும், கொரியாவைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் 1,614 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறித்தும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார்.

அப்பதிவில், "GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்குக் காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.

Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government" (கடினமான காலங்களுக்குத் தயாராக இருங்கள். தவெக ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்)'' என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் தொடர்ந்து போராடிய பெரியகுரும்பத் தெரு மக்களுக்கு இப்போது தீர்வு க... மேலும் பார்க்க

ஈரோடு: சுய உதவிக் குழுக்களுக்கு நிதி இணைப்பு வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் விஜய் | Album

ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோடு பெருந்துறையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தனர்ஈரோட... மேலும் பார்க்க

"இது என்ன சினிமாவா, Cut சொல்லிவிட்டு அடுத்த Take போவதற்கு?" - தவெக அரசை விமர்சித்த எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ... மேலும் பார்க்க

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' - நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர் பதற்றம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட எதிர்பாராத சூழலில், விசா காலம் முடிந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிக... மேலும் பார்க்க

`மாணவர்கள் தப்பு தப்பா முடிவெட்டிட்டு வந்தா மொட்டையடிச்சு விடுங்க..!' - அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப் பள்ளியில் மாணவர்களை மொட்டை அடித்துவிடுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசி இருப்பது, சர்ச்சையாகிருக்கிறது.அவர் பேசும்போது, ``நம் வ... மேலும் பார்க்க

`வெட்கம், திமுக-வுக்கும், தலைவருக்கும் இழுக்கல்லவா?'- துரைமுருகன் இல்ல திருமணம் குறித்து கி.வீரமணி

தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் உள்ள நண்பர் துரைமுருகன் இல்லத்தில் சமஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணமா? என்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியிருக்கிறார். திமுக ப... மேலும் பார்க்க