செய்திகள் :

தவெக: இறுதியாகும் அமைச்சரவை பட்டியல்... கூட்டணிக்கு வந்தவர்களுக்கும் ஜாக்பாட்!

post image

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவில் த.வெ.க தனிப்பெரும் கட்சியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவை இப்போது பெற்றுள்ளது. மேலும், சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துவிடும் முனைப்பில் தற்போது த.வெ.க முகாம் வேகமாக வேலை செய்து வருகிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

 இந்நிலையில்  விஜய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக பதவியேற்க உள்ளவர்கள் யார் என்கிற தகவல் தற்போது கசிய ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து த.வெ.க-வுக்கு நெருக்கனமானவர்கள் நம்மிடம் பேசும் போது, “த.வெ.க வின் மூத்த நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார், அருண் ராஜ், ராஜ்மோகன், ஜே.சி.டி.பிரபாகர், காரைக்குடி பிரபு, அறந்தாங்கி பர்வேஸ், மதுரை கல்லானை, ஈரோடு பாலாஜி, சேலம் பார்த்திபன், தாகிரா, விஜயலெட்சுமி, தஞ்சை சரவணன், மரிய வில்சன் ஆகியோர் பட்டியலில் இடம் பெற உள்ளனர் என்கிறார்கள். இவர்களுக்கான இலாகாகளும் இறுதி செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தில். 

விஜய்யை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்
விஜய்யை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

அதே போல் காங்கிரஸ் கட்சி இரண்டு அமைச்சர்களை வழங்க உள்ளார்களாம். அதன்படி அந்த கட்சியில் மேலுார் விஸ்வநாதன், தாரகை கத்பர்ட் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு தர உள்ளார்களாம்.

அதே போல், வி.சி.க-வும் த.வெ.க -வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மூடில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களும் இணைந்தால், வன்னியரசுக்கு வாய்ப்பு வழங்கும் மூடில் த.வெ.க உள்ளது. 

கடந்த அ.தி.மு.க, தி.மு.க போன்ற கட்சிகளின் ஆட்சியில் முப்பதுக்கு குறையாத அளவுக்கு அமைச்சர்கள் இடம்பெறுவார்கள். ஆனால், த.வெ.கவின் ஆட்சியில் அமைச்சர்களின் குறைவான எண்ணிக்கையிலேயே அமைச்சர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளனர். பின்னர் தேவையெனில் அமைச்சரவை விரிவாக்கம் செய்துகொள்ளலாம் என்கிற மூடில் இருக்கிறார்களாம்.

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" - சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நேற்றைய தினம், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித... மேலும் பார்க்க

`அஞ்சும் தவெக; அந்தக் கொள்கை உறுதியும் துணிவும் இருக்கிறதா விஜய்யிடம்?' - ஆளூர் ஷாநவாஸ்

108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதில் `உதவிக் கரம்' தேவைப்படுகிறது விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகத்துக்கு. திமுக கூட்டணியில் தொடர்ந்து வந்த காங்கிரஸ், அங்கிருந்து விலக... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக 'வழக்கறிஞர்' - நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

முன்னாள் எம்.பி செல்லக்குமார், சிட்டிங் அமைச்சர் அசோக்குமார் என இரண்டு 'வெயிட்டான' புள்ளிகளை எதிர்த்து, முதல் தேர்தலிலேயே கிருஷ்ணகிரி கோட்டையைத் தட்டித் தூக்கியிருக்கிறார் இந்த வழக்கறிஞர்.​யார் இந்த ம... மேலும் பார்க்க

`ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லை' - விஜய் உடனான சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்!

ஆட்சியமைக்க பெரும்பான்மை ஆதரவு தேவை என ஆளுநர் வலியுறுத்தியதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தன... மேலும் பார்க்க

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' - மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது.ஆனாலும் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ‘நான் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன், தேர்தலில் சதி நடந... மேலும் பார்க்க

"ஆளுநர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடக்கிறது பாஜக" - பெ.சண்முகம் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்கிற குரல் தற்போது தமிழ்நாடு முழுவதும் எழுந்துள்ளது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்... மேலும் பார்க்க