செய்திகள் :

தவெக எப்படி ஆட்சி அமைக்கும்? எனக்கு தேவை 'சபைக்கு உள்ளே.!'- தமிழக ஆளுநர் அர்லேகர் நேரடி பதில்

post image

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அதனால், பிற கட்சிகளிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பது குறித்து தமிழ்நாடு இடைகால கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய்
விஜய்

எனக்கு தேவை...

அதில், "தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் தனக்கு 35 சதவீத வாக்குகள் அல்லது அது போன்ற ஒரு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார் விஜய்.

அவருக்கு நான் கூறியிருக்கும் பதில், "எனக்குத் தேவை உங்களை ஆதரிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் (எம்.எல்.ஏ-க்கள்) எண்ணிக்கைதான்' என்பதுதான்.

இந்தப் பதிலை அவர் ஏற்றிருக்கிறார்.

தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கிடைக்கிறதா என்பதை அந்தக் கட்சி தான் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் குறைந்தது 118 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போதைய அரசுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும்.

இதுதான் 'வெளியிலிருந்து ஆதரவு' என்பது. சபைக்கு வெளியே அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் சபைக்குள் அவர்கள் முதலமைச்சருக்கோ அல்லது அரசுக்கோ ஆதரவாக வாக்களிக்க வேண்டும். எனக்கு இது ஒன்றுதான் முக்கியம்.

தவெக ஆட்சி அமைக்க பல வழிமுறைகள் உள்ளன. அவர்கள் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என எல்லா வாய்ப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

கால அவகாசம் என்ன?

தவெக பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான கால அவகாசம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அது அந்தச் சூழலின் அவசரத்தைப் பொறுத்தது. இதுபோன்ற விஷயங்களில் குறிப்பிட்ட கால அவகாசம் கேட்கப்படலாம்.

கட்சித் தலைவர் கால அவகாசம் கேட்கலாம் அல்லது ஆளுநரே 'இந்தக் காலத்திற்குள் உங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என்று சொல்லலாம்.

அரசியலமைப்பிலோ அல்லது விதிகளிலோ இதற்கெனத் தனியாகக் கால அவகாசம் எதுவும் சொல்லப்படவில்லை". எனக் குறிப்பிட்டுள்ளார்.

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க