கும்பகோணம்: 'காங்கிரஸ் மேயர் பதவிக்குச் சிக்கலா?'- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண...
பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் நின்ற பெண் கமிஷனர்; ஒழுங்கீனமாக நடக்க முயன்று சிக்கிய ஆண்கள்
இரவு நேரங்களில் தனியாகப் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. அதனை தெரிந்து கொள்ள ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகர் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் பெண் போலீஸ் கமிஷனர் ஒருவர் மூன்று மணி நேரம் தனியாக நின்று கொண்டிருந்தார்.
மல்காஜ்கிரி நகர போலீஸ் கமிஷனர் வி.சுமதி நள்ளிரவு 12.30 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை தனியாக சாதாரண உடையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு மற்ற போலீஸாரும் சாதாரண உடையில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
இரவு நேரங்களில் பயணம் செய்யும் பெண்கள் எந்த மாதிரியான சிக்கல்களைச் சந்திக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள இது போன்ற ஒரு காரியத்தை சுமதி செய்தார்.

மூன்று மணி நேரம் சுமதி தனியாக நின்றபோது அவரை போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், மது அருந்திய ஆண்கள் அனுகினர். சில மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் கூட அவரை அனுகினர்.
பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபர்களை போலீஸார் ஏற்கனவே அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தனர்.
அதோடு பெண் போலீஸ் கமிஷனரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முயன்ற ஆண்களை உடனுக்குடன் சாதாரண உடையில் நின்று கொண்டிருந்த போலீஸார் அழைத்துச்சென்றனர். அவர்கள் மீது உடனே எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட தங்களது வாகனத்தை நிறுத்தி சுமதியிடம் பேசி எதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுவிட்டு சென்றனர். சுமதி இது போன்று இதற்கு முன்பு ஒரு ரயில் நிலையத்தில் செய்து இருக்கிறார்.



















