செய்திகள் :

மும்பை: பூங்காவில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; உதவி போலீஸ் கமிஷனர் கைது; என்ன நடந்தது?

post image

மும்பை ஒர்லி பகுதியில் இருக்கும் பூங்காவில் 9 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அங்கு வந்த 56 வயது உதவி போலீஸ் கமிஷனர் பூங்காவில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்டு சிறுமியிடம் சென்றார்.

அவர் அச்சிறுமியிடம் தனது ஆடையைக் கழற்றி தனது அந்தரங்க உறுப்பை சிறுமியிடம் காட்டினார். அதோடு அச்சிறுமியிடம் தனது அந்தரங்க உறுப்பைத் தொடும்படி கேட்டுக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி பயத்தில் அங்கிருந்து ஓடிவிட்டார். வீட்டிற்குச் சென்று தனது தாயாரிடம் இது குறித்து தெரிவித்தார். உடனே அப்பெண்ணின் தாயார் இது குறித்து போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் உடனே பூங்காவிற்குச் சென்று குற்றவாளி குறித்து விசாரித்தனர்.

கைது
கைது

பூங்காவில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை. இதையடுத்து அங்கு வருபவர்களிடம் விசாரணை நடத்தியதில் அடிக்கடி அங்கு வரக்கூடியது யார் என்ற விபரத்தைச் சேகரித்து உதவி போலீஸ் கமிஷனர் அடையாளம் காணப்பட்டு சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர். சிறுமியின் தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். நாக்பூரைச் சேர்ந்த அந்தப் போலீஸ் அதிகாரி கடந்த நவம்பர் மாதம்தான் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அவர் மும்பை ஒர்லியில் தனியாக வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு புனே அருகில் 4 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

Anand Mahindra: `வரலாற்றை மாற்றிய ஒரு வாக்கு' - ஆனந்த் மஹிந்திரா வியந்த திருப்பத்தூர் தேர்தல் களம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான போட்டி நிலவியது. தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க-வின் மூத்த நிர்வாகி கே.ஆர்... மேலும் பார்க்க

மும்பை: மாமரத்தில் விளைந்த சீதாப்பழம்? வைரலாகும் வீடியோ; ஆராய்ச்சியாளர் சொல்வது என்ன?

மும்பை அருகே மாமரம் ஒன்றில் சீதாப்பழம் விளைந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை அருகில் இருக்கும் பிவண்டி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஜெயேஷ் பாட்டீல். இவர் மளிகைக்கடை வைத்தி... மேலும் பார்க்க

சொல்லியடித்த சுவேந்து; சறுக்கிய மம்தா - மேற்கு வங்கத்தில் பாஜக முந்தியது எப்படி?

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. காலையில் இருந்தே பா.ஜ.கவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்தது... மேலும் பார்க்க

`குருவை மிஞ்சிய சிஷ்யன்' - மம்தாவிடம் அரசியல் பயின்று அவரையே வென்று முதல்வராகும் சுவந்து அதிகாரி?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சைக்குறியதாக இருந்தது. வாக்காளர் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மொத்தம் ... மேலும் பார்க்க

நெதர்லாந்து அரசக் குடும்பத்தை உலுக்கிய 'இரத்தக் களரி' சதி; இளவரசியைக் குறிவைத்த பயங்கரவாதி கைது

நெதர்லாந்து நாட்டின் அரசக் குடும்பத்தையே உலுக்கியுள்ள ஒரு பயங்கரமான கொலைச் சதி, கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த நாட்டின் வருங்கால அரசியான இளவரசி கேத்தல... மேலும் பார்க்க

மொபைல் போனுக்கு அடிமையான பிள்ளைகள்; மீட்க லட்சக்கணக்கில் செலவு செய்து பவுன்சர்களை நியமித்த பெற்றோர்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 வயது பெண் எப்போதும் மொபைல் போனில் மூழ்கியபடி இருந்தார். அவர் எப்போதும் சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்து கொண்டிருப்பார். திடீரென சமூக வ... மேலும் பார்க்க