செய்திகள் :

தாத்தா ஆனார் நடிகர் பிரபு; ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

post image

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

'திரிஷா இல்லனா நயந்தாரா', 'மார்க் ஆண்டனி', 'குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவருக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, துல்கர் சல்மான், விஷால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா தாய்மை அடைந்தார். ஆதிக்கும் பிரபு குடும்பத்தாரும் அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர்.

ஆதிக் ரவிச்சந்திரன்
ஆதிக் ரவிச்சந்திரன்

இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ வலி வர, அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்தனர் குடும்பத்தினர்.

அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா - ஆதிக் தம்பதிக்கு சினிமா வட்டார நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Karuppu: "நானும் கடவுள் பக்தி உள்ளவன் தான், ஆனால்.!" - நடிகர் சூர்யா

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் 'கருப்பு'. ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (மே 14) ஆம் தேதி வெளியாக உள்ள நிலை... மேலும் பார்க்க

`இப்ப Zombie-னா எல்லாருக்கும் தெரியுது; ஆனா அப்போ...'- சுவாரசியம் பகிரும் மிருதன் சக்தி சௌந்தர்ராஜன்

ஸோம்பி கான்செப்ட், ஹாலிவுட்டில் நமுத்துப்போன ஃபார்முலா என்றாலும் தமிழ் ஆடியன்ஸுக்கு ஸோம்பிகள் கொஞ்சம் புதுசு. பிரபுதேவா - வடிவேல் கூட்டணியில் சில மாதங்களுக்கு முன் வெளியான 'பேங் பேங்' படத்தின் முன்னோட... மேலும் பார்க்க

"லட்சியமும் செயலும் சேர்ந்தால் எதுவும் சாத்தியம்..." - முதல்வரை வாழ்த்திய `முதல்வன்' பட இயக்குநர்!

தமிழக முதல்வராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாகத் தவெக-வை மக்கள் உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள். பெரும் போராட... மேலும் பார்க்க

Karuppu: 'ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க.!' - சூர்யா

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்... மேலும் பார்க்க

குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க! - ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' பரபர அப்டேட்

ராகவா லாரன்ஸின் ஹிட் பாகங்களான 'காஞ்சனா' சீரீஸ், நாலாவது பாகத்துடன் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அவர் இயக்கி வரும் `காஞ்சனா 4' படம் 'முனி' பட வரிசையில் 5வது பாகமாகும். இதற்கிடையே 'பெ... மேலும் பார்க்க

"ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்றாங்க!" - கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ச... மேலும் பார்க்க