செய்திகள் :

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு - இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

post image

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மே 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், "கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்
பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் நெருக்கடி எதிரொலியால் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாகப் பயன்படுத்தவும் யோசனை வழங்கியிருக்கிறார்.

இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

தவிர வெறும் இரண்டு கார்களுடன் தான் இன்று பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'விஜய் ஸ்கெட்சை கணிக்க தவறிய எடப்பாடி பழனிசாமி.!' - அதிமுக மீண்டும் ஒருமுறை பிளவுப்பட்ட பின்னணி!

இரு கூறாக பிளவுப்பட்டு களத்தில் நிற்பது ஒன்றும் அதிமுகவுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இறப்பை தொடர்ந்து பல முறை அதிமுக பிளவுப்பட்டு இரு கூறாக நின்றிருக்கிறது. ஆனால், அப்போதெல்லாம் அதிமுகவின் இருப... மேலும் பார்க்க

Vijay : `கொளத்தூர் வெற்றியின் வீச்சைப் பார்த்துமா புரியவில்லை?' - உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதிலடி

இன்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த விமர்சனத்துக்கு தன் எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிலளித்திருக்கிறார். அதில், ``என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வ... மேலும் பார்க்க

`துரோகம் செய்த சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு தூக்குங்க!' - விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகன் தலைமையில், அவருடைய ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி... மேலும் பார்க்க

`சின்னம்மா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்' - எஸ்.பி.வேலுமணி உறுதி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆ... மேலும் பார்க்க

`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!' - இபிஎஸ் சாடல்

இன்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 234 சட்டமன்ற உறுப்பினர்களில், திமுக வெளிநடப்பு மற்றும் இதர காரணங்களால் 63 பேர் பங்கேற... மேலும் பார்க்க

கலைக்கப்பட்ட அரசுகள்; சிறைக்குச் சென்ற முதல்வர்... தமிழ்நாடு சட்டசபையின் கடந்தகால ஹைலைட்ஸ்!

பதினேழாவது சட்டசபையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தவெக, இன்று தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த பதினாறு சட்டமன்ற நிகழ்வுகளின்போது நடந்த சில முக்கிய சம்பவங்களைத் திரும்பிப் பா... மேலும் பார்க்க