செய்திகள் :

Cannes 2026: இரண்டாவது முறையாக ஆலியா பட்; ஆனால், கண்டுகொள்ளாத போட்டோகிராபர்ஸ்! - வைரலாகும் வீடியோ

post image

பிரான்ஸில், 79-வது கான் திரைப்பட விழா நேற்றைய தினம் தொடங்கியது. பாலிவுட் நடிகை ஆலியா பட் இரண்டாவது முறையாக, இந்தாண்டும் கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டிருக்கிறார்.

அவர் பிராண்ட் அம்பாசிடராக ஒப்பந்தம் செய்திருக்கும் ஒரு பிராண்டின் விளம்பரத்திற்காகக் கடந்த ஆண்டு கான் திரைப்பட விழாவில் அவர் கலந்துகொண்டிருந்தார்.

அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டும் தொடர்வதால், இரண்டாவது முறையாகக் இப்போதும் கலந்துகொண்டிருக்கிறார்.

Aliah Bhat
Aliah Bhat

இந்த கான் திரைப்பட விழாவில் ஆலியா பட் அணிந்து சென்றிருந்த பிங்க் நிற ஆடை இணையத்தில் பயங்கர வைரலாகியிருக்கிறது.

அந்த உடை மட்டுமல்ல, ஆலியா பட் கான் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட்டில் நடந்து செல்லும் காணொளி ஒன்றும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில் ஆலியா பட், ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்துகொண்டிருக்கிறார். ரெட் கார்பெட்டில் அவர் புகைப்படக் கலைஞர்களுக்காகப் போஸ் கொடுத்திருக்கிறார்.

ஆனால், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் ஆலியா பட்டை கவனிக்காமல், வேறு நபர்களைப் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்திருக்கிறார்கள்.

இப்படியான ஒரு விஷயம் நிகழ்ந்தவுடன் அங்கிருந்த மொபைல் போன் புகைப்படக் கலைஞர்களுக்குப் போஸ் கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறார் ஆலியா பட்.

ஆலியா பட்
ஆலியா பட்

இந்நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்து நெட்டிசன்கள், "ஒரு சர்வதேச மேடையில் இவரை யாருக்கும் தெரியவில்லை என்பது மிகப்பெரிய அவமானம்." என்றும், "புகைப்படக் கலைஞர்கள் அவர்களுடைய சினிமாவைச் சேர்ந்த நட்சத்திரத்தைப் புகைப்படம் எடுப்பதில் சீரியஸாக இருந்திருக்கலாம்" என்றும் பதிவிடும் அவர்கள், "ஒரு சிறிய வீடியோவை வைத்துக்கொண்டு ஒருவர் அடைந்திருக்கும் புகழைக் கேலி செய்வது தவறு. அவர் அந்தச் சூழலை மிகவும் பக்குவமாகவும், தன்னம்பிக்கையுடனும் கையாண்டிருக்கிறார்" என ஆலியா பட்டிற்கு ஆதரவாகப் பதிவிட்டு வருகிறார்கள்.

"படம் ஹிட் ஆகும் என நம்பிக்கையாக இருந்தோம்; ஆனால், ஓடாததற்கு..." - ஆமீர் கானின் மகன் ஜூனைத் கான்!

ஆமிர் கானின் மகனான ஜூனைத் கான் நடித்திருந்த 'ஏக் தின்' திரைப்படம் மே 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதுதான் சாய் பல்லவியின் பாலிவுட் அறிமுகம... மேலும் பார்க்க

"Raja Shivaji படத்தில் நடிக்க நான், அமிதாப், சல்மான் சம்பளம் வாங்கவில்லை" - ரிதேஷ் நெகிழ்ச்சி

மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராஜா சிவாஜி என்ற பெயரில் நடிகர் ரிதேஷ் தேஷ்முக் புதிய படம் ஒன்றைத் தயாரித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஒன்றாம் தேதி திரைக்கு வந்து வெ... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் தீபிகா தீவிரம்; வீட்டில் குழந்தையைக் கவனிக்கும் ரன்வீர்; ஆச்சரியத்தில் பாலிவுட்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. உலக அளவில் படம் ரூ.1700 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து இருக்கிறது. ஆனால் படம்... மேலும் பார்க்க

"3 வேளையும் பார்லே-ஜி பிஸ்கட்டை மட்டுமே சாப்பிட்டு உயிர் பிழைத்திருக்கிறேன்" - நவாசுதீன் சித்திக்

'கேங்ஸ் ஆஃப் வசைப்பூர்' திரைப்படம் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் நவாசுதீன் சித்திக், பாலிவுட்டில் இன்று தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் 'ரேடியோ நாஷா' இதழுக்கு அளித்த பேட... மேலும் பார்க்க

Ek Din Review: ஒரு நாள் மெமரி லாஸ் காதல்! - படமாக நினைவில் தங்குகிறதா இந்த `ஏக் தின்'?

கதாநாயகன் தினேஷும் (ஜுனைத் கான்), நாயகி மீரா ரங்கநாதனும் (சாய் பல்லவி) ஒரே ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மீராவை ஒருதலையாக காதலிக்கிறார் தினேஷ். அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் ஜப்பானுக்கு டூர்... மேலும் பார்க்க

`கெளரி வந்தபிறகுதான் எனது வாழ்க்கை முழுமையடைந்தது' - லைஃப் பார்ட்னர் குறித்து நடிகர் ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இரண்டு திருமணங்கள் செய்தார். ஆனால் இரண்டுமே நிலைத்திருக்கவில்லை. இரண்டு மனைவிகளையும் அவர் விவாகரத்து செய்துவிட்டார். அவர்களை விவாகரத்து செய்தாலும் தனது வீட்டிற்கு அருகேயே கு... மேலும் பார்க்க