செய்திகள் :

'திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் ப.சிதம்பரம்?' என்னவாகிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி?

post image

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர் இழுபறி நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொடர் இழுபறி நிலவி வருகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி இருதரப்பும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருந்தனர். அதிக சீட்டுகள் வேண்டும் என்பதில் காங்கிரஸ் விடாப்பிடியாக இருப்பதால் இருதரப்புக்கும் இடையே சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை.

திமுக கொடுக்கும் 25 இடங்களையெல்லாம் வாங்கிக் கொள்ள முடியாது என கிரிஷ் சோடங்கர் டெல்லியில் வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், மார்ச் 3 ஆம் தேதி மாலைக்குள் கூட்டணி குறித்து ஒரு முடிவை தெரிவிக்குமாறு திமுக தரப்பு காங்கிரஸிடம் கறாராக கூறியிருந்தது.

கூட்டணிக்குள் புகைச்சல் நிலவி வரும் நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்தம் இன்று மாலை நடக்கவிருக்கிறது. அதற்கும் முதல்வரும் ப.சிதம்பரமும் ஒன்றாக செல்ல வாய்ப்பிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஷ் சோடங்கர் இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வருவது இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ப. சிதம்பரம்
ப.சிதம்பரம்

இறுதிக்கட்ட பரபரப்பில் உழன்று கொண்டிருக்கிறது திமுக - காங்கிரஸ் கூட்டணி. இதனிடையே, முதல்வரை சிதம்பரம் சந்திக்க இருக்கும் சூழலில், செல்வப்பெருந்தகை சிதம்பரம் வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற... மேலும் பார்க்க

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் ... மேலும் பார்க்க

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே ... மேலும் பார்க்க

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை ... மேலும் பார்க்க