செய்திகள் :

திண்டுக்கல்: அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்தது யார்? அதிர்ச்சியூட்டும் பின்னணி

post image

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலக் கழிவுகள் கலக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளன.

மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துண்டு சீட்டில் உள்ள எழுத்துகள் அழிந்த நிலையில் 'எங்களுடைய குடியிருப்புகளை அழித்தவர்கள்' என்ற வாசகங்கள் எழுதியிருந்தது.

இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வரும் நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

குடிநீர்த் தொட்டியில்
குடிநீர்த் தொட்டியில்

இந்த விவகாரம் குறித்து தங்கமாபட்டி மக்கள் நம்மிடையே பேசும்போது, “தற்போது உயர்நிலைப்பள்ளி உள்ள இடத்தில் இதற்கு முன்பு 13 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாகக் குடியிருந்த வந்தனர். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு வேறு இடம் கொடுக்கபட்ட நிலையில் நான்கு குடும்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்கபடாததால் பள்ளிக்கு அருகிலேயே குடியிருந்து வருகின்றனர்.

தற்போது பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி வருவதால், அந்தக் குடும்பங்கள் வெளியே சென்று வர வழியில்லை என்பதால் தங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடம் வழங்கபட வேண்டுமென இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

தொட்டியில் கிடந்த சீட்டில் கூட ‘எங்களுடைய குடியை கெடுத்தவர்களுக்கு எச்சரிக்கை’ என்ற வாசகங்கள்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்

தொட்டியில் இருந்த சீட்டு
தொட்டியில் இருந்த சீட்டு

இது குறித்து அந்தக் குடும்பங்களிடையே விசாரித்த போது, “எங்களுடைய குழந்தைகளும்தான் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் மலத்தைக் கலந்தால் எங்களுடைய குழந்தைகளும் அந்தத் தண்ணீரைக் குடிப்பார்கள்தானே. நாங்கள் இந்த மாதிரியான கீழ்தரமான வேலைகளைச் செய்யமாட்டோம். எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்ய வேண்டுமென பள்ளி நிர்வாகத்தில் உள்ள சில ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

மேலும் ஆசிரியர்கள் வந்து அடிக்கடி எங்களை வெளியேற வேண்டுமென மிரட்டுவதோடு எங்களை அடிக்க வந்தது தொடர்பாக வடமதுரை காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளோம். குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த நாளான்று சி.பி.எம் கட்சியினருடன் சென்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து நிலம் வழங்குமாறு மனு கொடுத்து வந்தோம்.

எங்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே ஆசிரியர்களே இந்த விஷயத்தைச் செய்துள்ளார்களா? என்று எங்களுக்குச் சந்தேகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் எங்களைச் சிக்க வைத்து நாங்கள் இவ்வளவு நாளாகச் செய்து வரும் போராட்டத்தைக்கூட கொச்சைப்படுத்துவதற்காகவே இப்படி செய்துள்ளார்கள்” என்றனர்.

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

`காக்ரோச், இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் `நோ' - தமிழக அரசின் சர்ச்சை உத்தரவும் உடனடி வாபஸும்

மாணவர்கள், காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரிக் ... மேலும் பார்க்க