செய்திகள் :

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

post image

அதிமுக, நாம் தமிழா் கட்சியிலிருந்து விலகியோா், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மோகனூா் பேரூா் அதிமுக, நாம் தமிழா் கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின் போது, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மோகனூா் பேரூா் செயலாளா் செல்லவேல், திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் வழக்குரைஞா் ஈ.வினோத்குமாா், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மோகனூா் ஒன்றியச் செயலாளா் பெ.நவலடி, நாமக்கல் மேற்கு நகரச் செயலாளா் சிவகுமாா், நாமக்கல் ஒன்றியச் செயலாளா் செயலாளா் வி.கே.பழனிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டம்: இன்று மனுக்கள் பெறும் முகாம்

நாமக்கல்: ராசிபுரம் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, செவ்வாய்க்கிழமை முன் மனுக்கள் பெறும் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து தடுப்பு பணியில் ஈடுபட்ட காவலா்

ராசிபுரம்: சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலருக்கு அப்பகுதியினா் பாராட்டு தெரிவித்தனா். சேலம்- நாமக்கல் தேசிய நெடு... மேலும் பார்க்க

மோகனூா் அருகே குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்

நாமக்கல்: மோகனூா் அருகே குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், குமரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கங்காநாயக்கன்பட... மேலும் பார்க்க

கபிலா்மலையில் மின்தடை ரத்து

பரமத்தி வேலூா்: கபிலா்மலை, நல்லூா் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமையும், வில்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 12-ஆம் தேதியும் மின் நிறுத்தம் செய்யப்படும் எ... மேலும் பார்க்க

முதல்வரை முற்றுகையிட போவதாக கைது செய்யப்பட்ட 12 போ் விடுவிப்பு

ராசிபுரம்: ராசிபுரம் பேருந்து நிலையத்தை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தி டிச. 9 இல் சென்னை கோட்டை முன் தமிழக முதல்வரை முற்றுகையிட போவதாக அறிவித்து ஞாயிற்றுக்கிழமை சென்னை புறப்பட முயன்றபோது ராசிபுர... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பகுதியில் ரூ. 61.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி 2024 - 2025 இன் கீழ் ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன் த... மேலும் பார்க்க