செய்திகள் :

"திமுகவை நாங்கள் 'தீய சக்தி' என்று சொல்வதற்கு காரணம்..!" - அமைச்சர்‌ நிர்மல் குமார்

post image

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், அமைச்சர் நிர்மல் குமார்.

அந்தச் சந்திப்பின் போது திமுக, அதிமுக, பாஜக, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குறித்து பேசியதாவது...

"தற்போது திமுக, அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் வரிசையாக ஆளுநரைச் சந்திப்பது அவை ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதைக் காட்டுகிறது.

எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், ஆளுநரை முன்னிறுத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்க முயல்கிறார்கள். ஆனால் இந்த அரசை யாராலும் தொந்தரவு செய்ய முடியாது.

அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அனிதா ராதாகிருஷ்ணன் கைது

அனிதா ராதாகிருஷ்ணன் 10-ஆம் தேதி ஆஜராவதாகத் தெரிவித்திருந்தாலும், அவரது முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டபூர்வமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் தேவையில்லாமல் பேசுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது அவசியமான செயலாகும்.

நாங்கள் திமுகவை 'தீய சக்தி' என்று அழைப்பது, கடந்த 70 ஆண்டுகளாக அவர்கள் தமிழகத்திற்குச் செய்த துரோகங்களை அடிப்படையாகக் கொண்டதுதானே தவிர, அது தனிநபர் விமர்சனமோ அல்லது குடும்பத்தினரைப் பற்றிய தவறான பேச்சோ அல்ல.

அனிதா ராதாகிருஷ்ணன் எத்தனை முயற்சிகள் செய்தாலும், பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் அவரைத் தமிழக வெற்றி கழகத்தில் எக்காரணம் கொண்டும் இணைக்க முடியாது.

தென் தமிழகத்தில் அவர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் செய்த நில அபகரிப்பு மற்றும் கட்டப் பஞ்சாயத்துகள் குறித்துப் பொதுமக்கள் நன்கு அறிவார்கள்.

திமுக தலைமை தற்போது மக்களிடம் செல்வாக்கு இல்லாத நபர்களைப் பேச வைக்கிறது".

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க