செய்திகள் :

திமுக ஆர்ப்பாட்டம்:``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சரை வச்சிட்டு எங்களை சொல்றீங்களா?" - மேயர் பிரியா

post image

சட்டப்பேரவையில் தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையிலும், மிசா சட்டம் குறித்து தவறாகவும் பேசியதாக முதல்வர் ஜோசப் விஜய்யைக் கண்டித்து, தி.மு.க தலைமை உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் கோட்டை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தி.மு.க எம்.பி திருச்சி சிவா உரையாற்றினார். அப்போது, ```சட்டப்பேரவையில் திமுக தலைவரை அவதூறாகப் பேசிய முதல்வர் விஜய் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது பேச்சு பேரவை விதிகளுக்கு மாறானது. அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். திமுக அரசு மீது தேவையில்லாத கருத்துகளைப் பதிவு செய்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்" எனப் பலத்த கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய மேயர் பிரியா, ``பவுடர் அமைச்சர், டவுசர் அமைச்சர், முறுக்கு அமைச்சர், சட்டமன்றத்தில் பேப்பரில் எழுதிக்கொடுத்ததை ஆதாரங்கள் இன்றி பேரவையில் கத்தும் அமைச்சர்களையும், பேரவையில் எழுத்துக்கூட்டி வாசிக்கும் எம்.எல்.ஏ-க்களையும் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தி.மு.க-வைப் பார்த்துக் கேள்வி கேட்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?. பேரவைக்கு வரும் முதல்வர், படத்தில் நடித்துவிட்டுப் போவது போல 1-2 மணி நேரம் கையை ஆட்டிப் பேசிவிட்டுச் செல்கிறார்.

வெறும் கை அசைவுகளால் உண்மையை மறைத்துவிட முடியாது. மிசா சட்டத்தைப் பற்றிப் பேசும் விஜய்க்கு அதைப் பற்றி என்ன தெரியும்? எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பேரவையை விட்டுப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டு, அவரே முதுகைக் காட்டிவிட்டு ஓடிவிட்டார். நாங்களாக எந்தப் பிரச்சினைக்கும் போகமாட்டோம்; ஆனால், வந்த பிரச்சினையை விடமாட்டோம். 'என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடமாட்டேன்' என்பதைப் போல, எங்கள் தலைவனைத் தொட்டவர் யாராக இருந்தாலும், அவர் மாண்புமிகுவாகவே இருந்தாலும், நாங்கள் சும்மா விடமாட்டோம்" எனக் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறையிலிருக்கும் தேவகவுடா பேரனின் மொபைலில் ஆபாச வீடியோ; சிக்கியது எப்படி?

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: 'ஆசிரியர்களைச் சொந்தப் பணத்தைச் செலவிடக் கட்டாயப்படுத்துவது ஏன்?'- அன்புமணி

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழாவிற்கு தேவையான அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அவர்களின் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

போர் தீவிரம்: சவூதி எண்ணெய் குழாய் மீது தாக்குதல்; 1,200 கிமீ நீளப் பைப்பை மூடியது சவூதி!

போர்மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கெனவே அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஹர்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளது. மற்றொருபுறம், ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு '... மேலும் பார்க்க

"பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை நிதி ஒதுக்கீட்டில் அரசு காட்டுவதில்லை"- அன்பில் மகேஸ்

"ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்" என்று திமுக முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எ... மேலும் பார்க்க

ஸ்டாலின் மிசா கைது: ``இதுவரை அவர்களால் தெளிவான சான்றளிக்க முடியவில்லை" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், ``தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியானது வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலு... மேலும் பார்க்க