செய்திகள் :

’திமுக எம்.எல்.ஏ-க்கள் கார் வாங்க மறுத்ததற்கு இதுதான் காரணம்.!’ – செங்கோட்டையன் சொன்ன விளக்கம்

post image

கோவை விமான நிலையத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டமன்றத்தில்  ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பேரவை தலைவர், தமிழக முதல்வர் விரும்புவதைப் போல சபையில் எதிர்காலத்தில் தமிழகத்திற்கு என்ன செய்யலாம் என்று கருத்துக்களை பரிமாறிக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும். வார்த்தை ஜாலங்களால் தேவையற்ற விவாதங்கள் வருகிறது. அந்த விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் தேவை. ஒரு ஓட்டுநர், உதவியாளர் தேவை. ஒன்றிய குழுவில் இருக்கும் ஒன்றிய குழு தலைவர்களுக்கு, நகராட்சி தலைவர்களுக்கு தனியாக வாகனம் தி.மு.க ஆட்சியில்  கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாங்கள்  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளோம். தி.மு.க-வினர் தங்களுக்கு கார் வேண்டியதில்லை என்று சொல்ல காரணம், அவர்கள் ஆட்சியில் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற எண்ணம்தான்.

ஒரு கார் உங்களிடம் இருக்கிறது. குழந்தைகள் போய் வர இன்னொரு கார் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? நிதி நெருக்கடி என்பது ஒன்று. அதே நேரத்தில் தன்னலம் என்று வழி இல்லாமல் பணி  செய்ய இது ஏதுவாக இருக்கும் என்ற மனித நேயத்தில் முதல்வர்  வழங்கி இருக்கிறார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

பல்வேறு நிதி சுமைகள் இருந்தாலும் எதை செய்யலாம் என முடிவு செய்கின்றோம். இன்று இருக்கின்ற நிதி நெருக்கடியின் காரணமாக வாங்கவில்லை என்று சொல்வது, அவர்கள் காலத்தில் செய்ய முடியவில்லை இவர்கள் செய்து விட்டார்களே என்ற வேதனைதான். மேகதாது அணை விவகாரத்தை பொறுத்தவரை முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஒரு செங்கலை கூட அங்கே வைக்க முடியாது என்பது கொள்கை முடிவு. அதில் தெளிவாக இருக்கிறார். மேகதாது விவகாரத்தில் தெளிவான முடிவுகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறது. என்றைக்கும் நம் நிலைப்பாட்டை மீறி  அணைக்கட்ட முடியாது.

குறிப்பிட்ட பகுதியில் ஒரு வட்டாட்சியர் இடதுசாரி பொறுப்பாளர்கள் குறித்து பட்டியல் எடுக்க உத்தரவு வழங்கினார். தகவல் தெரிந்தவுடன் இரவோடு இரவாக அவர் மாற்றப்பட்டார். அவர் கொடுத்த  கடிதம் உடனே திரும்பப் பெறப்பட்டது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முதல்வர் விஜய் மேஜையில் உள்ள 3 கோப்புகள் தொடர்பாக எந்த தேதியில், எப்போது அறிவிப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். சட்ட விதியின் அடிப்படையில் கோப்புகளை பார்த்து, என்ன நடைபெற்று இருக்கிறது என உணர்ந்த பிறகு சட்டதுறையோடு கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். கோப்புகளில்  என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என நிதி அமைச்சர், முதல்வரிடம் விளக்கத்தை கொடுத்து இருக்கிறார். அதைத்தான் அவர்  சொல்லியிருக்கிறார்” என்றார்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க