செய்திகள் :

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

post image

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க முடிவெடுத்துவிட்டது கட்சித் தலைமை. இச்சூழலில் 'அடுத்த பொதுச்செயலாளர் யார்?' என்ற கேள்வி அறிவாலயத்தை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

உதயநிதி, கனிமொழி
உதயநிதி, கனிமொழி

நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், "த.வெ.க ஆட்சியமைத்த நாளிலிருந்து, சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முதல்வர் விஜய் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உரிய பதிலடி தர முடியாமல் தடுமாறுகிறது தி.மு.க. ‘கழக ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலை ஒழித்து விட்டோம்’ என த.வெ.க செட் செய்யும் நரேட்டிவ்களை உடைக்க முடியவில்லை.

கட்சி மறுசீரமைப்பு விவகாரங்களை எங்கே தொடங்கி, எங்கே முடிப்பது எனத் தெரியவில்லை. ‘இப்படியோர் இக்கட்டான சூழலிலிருந்து தி.மு.க-வை மீட்டெடுக்க நம் ஒருவரால் மட்டும் முடியாது’ என்ற முடிவுக்கு வந்திருக்கும் உதயநிதி, நிலைமையைப் புரிந்துகொண்டு கனிமொழியை பவர் பாலிட்டிக்ஸில் இணைத்துக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருக்கிறார். ஆகவே அவருக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கப்போவது நிச்சயம்" என்றனர்.

நம்மிடம் பேசிய தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சிலர், "பெரியவர் துரைமுருகனைப் போல இல்லாமல் தமிழ்நாடு முழுக்க பயணிக்கும் துடிப்பான ஒரு பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டும் என நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சீனியாரிட்டி அடிப்படையில் டி.ஆர் பாலுவை பொதுச்செயலாளராக்கலாம் என்ற குரல் எழுந்தபோது, 'ஏற்கனவே நம்மை முதியோர் கட்சி என விமர்சிக்கிறார்கள், டி.ஆர் பாலுவை நியமித்தால் இளைஞர்களை ஈர்ப்பது மிகக் கடினம்' என வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

எனவே பட்டியல் சமூக பிரதிநிதியாக ஆ.ராசாவை பொதுச்செயலாளராக்குவோம்.. அல்லது பெண்களின் பிரதிநிதியாக கனிமொழி எம்.பியை பொதுச்செயலாளாக்கலாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியொடு வாய்ப்பு கிடைத்தால் திறம்பட செயலாற்ற கனிமொழி தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்" என்றனர்.

ஸ்டாலின் - கனிமொழி
ஸ்டாலின் - கனிமொழி

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், "கனிமொழியை பொதுச்செயலாளராக்கினால் பொது சமூகத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும். பட்டியல் சமூகத்தைச் சார்ந்த ஆ.ராசாவை பொதுச்செயலாளராக்கினால் ஓபிசி அரசியல் பாதிக்கப்படும் என்பதால் கனிமொழியைத் தேர்வு செய்யவே சீனியர்களும் விரும்புவார்கள். ஆனால், அதிலொரு சிக்கலும் ஒளிந்திருக்கிறது.

ஸ்டாலின் கட்சியின் தலைவர், அவரது மகன் உதயநிதி எதிர்காலத் தலைவர், ஸ்டாலினின் தங்கை பொதுச்செயலாளர் என்கிற வாரிசு அரசியல் விமர்சனம் மேலோங்கும் அபாயமும் இருக்கிறது. கலைஞர் குடும்பத்தைச் சாராமல் இருந்த பொதுச்செயலாளர் பொறுப்பும் குடும்பத்துக்குள் சென்றுவிட்டது என்ற குழப்பம் வரும். அதேசமயம் 'சாகும்வரை நானே பொதுச்செயலாளர்' எனப் பிடிவாதமாக இருக்கிறார் துரைமுருகன். ஆகையால் இறுதி முடிவை எடுக்கப்போவது தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான்" என்றனர்

பார்ப்போம்!

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க