முதலில் வாக்களியுங்கள், பின்னர் உணவருந்தலாம்: மோடி வலியுறுத்தல்
திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி சொத்துகள் மீட்பு
சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டன.
இது குறித்து அறநிலையத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமாக எம்.டி.ஹெச். சாலை, சிவசக்தி காலனியில் உள்ள 17,625 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிகமனை சக்தி எலக்ட்ரோ பிளேட்டிங் என்ற நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்நிறுவனம் நீண்ட நாள்களாக வாடகைத் தொகையை நிலுவையில் வைத்திருந்தது. இது தொடா்பாக சென்னை மண்டல இணை ஆணையா் கே.ரேணுகாதேவி நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டாா்.
அதன்படி, சென்னை உதவி ஆணையா் கி.பாரதிராஜா முன்னிலையில், காவல் துறை மற்றும் வருவாய் துறை அலுவலா்கள் ஆகியோரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.