செய்திகள் :

திருச்சி: "உணவைப் பிடுங்குது, கூரையைப் பிரிக்குது" - குரங்குகளின் தொல்லையால் அல்லலில் கிராம மக்கள்

post image

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கிறது 94 கரியமாணிக்கம்.

தினமும் கொத்து கொத்தாக 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் 94 கரியமாணிக்கம் கிராமத்திற்குள் சுற்றி வருவதாகவும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களைத் தின்று சேதப்படுத்துவதாகவும், இவ்வாறு அதிகரித்து வருகின்ற குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை எனவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், குரங்குகள் தொல்லையால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தையொட்டி சிறுகனூர் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்குகள், மான்கள், காட்டுபன்றி மற்றும் பல உயிரினங்கள் வசித்து வருகின்றன.

monkey

இதையடுத்து, அவை உணவுக்காக அப்பகுதியைச் சுற்றியுள்ள சணமங்கலம், பெரகம்பி, 94 கரியமாணிக்கம், சமயபுரம் மற்றும் எதுமலை போன்ற கிராமப்பகுதிகளுக்கு வருவதாகவும், குரங்குகளின் சேட்டைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் புகார் வாசிக்கிறார்கள்.

இதில் குறிப்பாக, 94 கரியமாணிக்கத்தில் குரங்குகள் நாள்தோறும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை நாசம் செய்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, கிராமத்தைச் சுற்றிலும் உள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி செடிகள் மற்றும் காய்களைக் கடித்து நாசம் செய்து விடுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிகின்றனர்.

இதுதொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்,

"பல முறை வனத்துறை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட அலுவலகத்தில் நேரில் குரங்குகளைப் பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்து வலியுறுத்தி வருகின்றோம். தற்போது கிராம மக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் கையில் பொருட்களை எடுத்துசெல்லும் போது உணவு பொருட்களைப் பிடுங்கி விடுகின்றன. அதோடு, பள்ளி மாணவ மாணவிகளை விரட்டி கடிக்க வருகின்றன.

monkey

அதேபோல், வீடுகளில் உடைகளை, உணவுகளை மற்றும் வெளியில் உலரவிடும் சந்தர்ப்பத்தில் குரங்குகள் அவற்றை கொண்டுசெல்வதால் சிரமப்பட்டு வருகிறோம். வனத்துறையிடம் புகார் கொடுத்தால், 'நாங்கள் குரங்குகளைப் பிடித்துவிட்டோம். இனிமேல் குரங்குகளைப் பிடிக்க வேண்டுமென்றால், ஒரு குரங்கு பிடித்தால் ரூ. 100 தர வேண்டும்' என்று பேரம் பேசி, எங்களை நோகடிக்க வைக்கிறார்கள்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் அல்லது முதலமைச்சர் இந்தக் கிராம மக்கள் நலன் கருதி தனி கவனம் செலுத்தி குரங்குகள் அட்டகாசத்தைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் தமிழர்கள் சுட்டுக்கொலை: "தமிழக அரசு அதிகாரப்பூர்வ கண்டனம்கூட தெரிவிக்கவில்லை" - உதயநிதி

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்டு ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. அந்த வனப்பகுதிக்குள் தொலைந்த மாடுகளைத் தேடிச் சென்ற 4 தமிழர்கள... மேலும் பார்க்க

மதுரை பூசாரி காவல் மரணம்: போலீஸ் தாக்கியதால் இறந்ததாக மனைவி குற்றச்சாட்டு; நீதிமன்றம் சொன்னது என்ன?

மதுரை மாநகர் சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சிவனடியார் பரமசிவம். இவர் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் தேதி உயிர... மேலும் பார்க்க

திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைக் கேட்ட தாசில்தார்; பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியாம்பாறை தாசில்தார் அய்யாசாமி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குஜிலியாம்பாறை வருவாய் கிராமங்களில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட... மேலும் பார்க்க

"விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் உலகிற்கான கேரளாவின் வளர்ச்சி நுழைவாயில்"- கேரள முதல்வர் பெருமிதம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி, இறக்குமதி எக்சிம் செயல்பாடுகள் மற்றும் ‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தை கேரள முதல்வர் வி.டி.சதீசன் இன்று தொடங்கி வைத்த... மேலும் பார்க்க

"ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை" - முதன்முறையாக ட்ரம்ப் பேச்சு

‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்... சுமூகமாகப் பேச்சுவார்த்தை இருக்கிறது...... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு; `இது குறித்தெல்லாம்தான் பேசினேன்' - திருமா சொல்வதென்ன?

நேற்று கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை’ நடத்தியது. இதில் முதன்முறையாகத் தவெகவுடன் கூட்டணி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விசிக தலைவ... மேலும் பார்க்க