செய்திகள் :

திருச்சி: ரீல்ஸ் மோகம்; கோயில் சுவற்றின்மீது பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசிய இருவர் கைது!

post image

திருச்சி, பாலக்கரை, காஜாபேட்டை மெயின் ரோட்டில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. அந்த கோயில் சுவற்றில் இரவு நேரத்தில் பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து அதை கோயிலின் சுவரில் மர்ம நபர்கள் வீசி உள்ளனர். இதனால், அந்த கோயில் சுவற்றில் தீ பற்றி எரிந்தது. அதனை வீடியோவாக பதிவிட்டு சமூக வலைதளத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டனர். இந்நிலையில், இச்சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெரோஸ்தான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில், பாலக்கரையை சேர்ந்த கேசவபுஷன்(வயது: 19), முபித்(வயது: 18) ஆகிய இருவர் கோயிலின் சுவற்றில் பெட்ரோல் பாட்டிலை வீசி அதை ரீல்ஸாக எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. ரீல்ஸ் மோகத்தில் அவர்கள் இதனை செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தில் கோயில் சுவற்றில் பெட்ரோல் பாட்டிலில் இளைஞர்கள் இருவர் தீவைத்து வீசிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்கூட்டரில் சென்ற பெண்; துரத்திச் சென்று செயின் பறிக்க முயன்ற தவெக நிர்வாகி? - போலீஸ் தீவிர விசாரணை

கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.கே நகர் பகுதியைச் சேர்ந்த மகுடபதியின் மனைவி பிரியா. இவர், தனது பெற்றோரை சந்திப்பதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஈரோடு மாவட்டம், கொடுமுடி நோக்கி சென்றுள்ளார். அப்போது, ... மேலும் பார்க்க

கரூர்: மர்மமான முறையில் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு; உறவினர்கள் தர்ணா! - போலீஸார் விசாரணை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், போத்து ராவுத்தன்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பாலசுப்பிரமணியம் என்பவர் பணியாற்றி வந்தார். பாலசுப்பிரமணியம், தனது மனைவி நீலவ... மேலும் பார்க்க

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொன்ற பெண்; தலையணையால் அமுக்கி மகனையும் கொன்றுவிட்டு நாடகம்!

பெங்களூருவில் உள்ள பசவேஷ்வர் நகரில் தனது மனைவி ஹரினி மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தவர், அபிநந்தன். இவர் தனது மகனுடன் வீட்டில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். இது குறித்து ஹரினி போலீஸாரை ... மேலும் பார்க்க

சென்னை: கை, கால்கள் கட்டி, வாயில் துணி அடைத்து இளைஞர் கொலை - போதை மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூரம்

காஞ்சிபுரம், விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரின் மகன் அருண்குமார் (39). இவர் செம்பாக்கத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்க்கப்ப... மேலும் பார்க்க

தருமபுரி: நகைக்காக மாமியாரைக் கொன்று குவாரி குட்டையில் வீசிய திமுக நிர்வாகி; நண்பர்களுடன் கைது

நகைக்காக மாமியாரைக் கொலை செய்து சடலத்தை குவாரி குட்டையில் வீசிய சம்பவத்தில் திமுக ஒன்றிய அமைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க

சேலம்:சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி தொடர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - 2 சிறார்கள் உட்பட 4 பேர் கைது

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரின் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமிக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டிருப்பதாக சந்தேகமடைந்த சிறுமியின் தாய் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் க... மேலும் பார்க்க