செய்திகள் :

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

post image

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும் இடமாக மாறியிருந்தது. ஏரியின் உட்புறம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சாலையோரங்களில் நெகிழிப் பைகள், மருத்துவக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள் எனப் பல்வேறு கழிவுகள் குவிந்து கிடந்தன.

இப்படி குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரியை ஒட்டி ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இந்தக் குப்பைகளால் அப்பகுதி மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "இரவு நேரங்களில் சமூகப் பொறுப்பற்ற சிலர் குப்பைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு வந்து இங்கே போட்டுவிட்டுச் செல்கிறார்கள். வேலி அமைத்தும் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க முடியவில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்" என தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த பிரச்னை தொடர்பாக பொதுமக்களிடம் பேசியும் நேரடியாக ஸ்பாட் விசிட் செய்தும், இந்த அவல நிலை குறித்து விகடன் தளத்தில் 'ஏரியா? குப்பைக் கிடங்கா?' கழிவுகளால் மாசடைந்த திருப்பத்தூர் பெரிய ஏரி- நகராட்சியின் விளக்கம் என்ன? என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை நவம்பர் 15 அன்று வெளியிட்டிருந்தோம். மேலும், இந்தப் பிரச்னையை நகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம்.

இந்த நிலையில், விகடன் செய்தி எதிரொலியாக, செய்தி வெளியான ஒரே நாளில் 16/11/2026 அன்று ஏரியின் உட்புறம் மற்றும் சாலையோரங்களில் தேங்கியிருந்த குப்பைகளை நகராட்சி நிர்வாகம் விரைந்து அகற்றி, தூய்மைப்படுத்தியுள்ளது. மேலும், இனிமேல் இங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கண்காணிப்புக்கு ஆள் நியமிப்பதுடன், தடையை மீறிக் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

மதுரை தனிஷிக் நகைக்கடையில் மீட்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள நகைகள்; காட்சிப்படுத்திய போலீஸ்| Photo

மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மத... மேலும் பார்க்க

"சு.வெ-வின் பயணச் சலுகையை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.!"- நீதிபதி சுவாமிநாதனுக்கு சண்முகம் கண்டனம்

"உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல், நீதித்துறை நெறிகளுக்கு முரணானது. அவர் மீதி உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

'சூரசம்ஹார விழாவில் ஆகமவிதிகள் மீறப்பட்டனவா?'- சேகர் பாபுவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரமேஷ் பதில்

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, ஆகம விதிகள் அதிகப்படியாக மீறப்பட்டிருக்கிறது என்றும் இது முழுக்க முழுக்க ரீல்ஸ் ஆட்சிக்காக, ரீல்ஸ்க்காகவே கொண்டாடப்பட்ட ஒரு சூரசம்ஹார நிகழ்ச்சி என்றும... மேலும் பார்க்க