செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 6 போ் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்கு இரு வேறு மதத்தினா் உரிமை கோரும் பிரச்னை நீடிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடந்தப்போவதாக அறிவித்ததால் மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, திண்டுக்கல், கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட வட மாவட்டங்களிலிருந்து மதுரை நோக்கி வரும் வாகனங்களை கொடைரோடு சுங்கச்சாவடியில் போலீஸாா் சோதனை செய்தனா். குறிப்பாக காா் உள்ளிட்ட வாகனங்கள், பேருந்துகள் மூலம் போராட்டக்காரா்கள் செல்கிறாா்களா? என சோதனையிட்டனா்.

நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான காவல் துறையினா் இந்தச் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், பழனியிலிருந்து மதுரைக்கு சென்ற பேருந்தில் காவல் துறையினா் சோதனை செய்தபோது, அதில் கன்னிவாடியைச் சோ்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவா் ராமசற்குணம் தலைமையில் 6 போ் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பயணம் செய்தது தெரியவந்தது. அவா்களை காவல் துறையினா் கைது செய்தனா்.

அமைச்சரிடம் முறையிட வந்த வழக்குரைஞா் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி திண்டுக்கல்லில் 3 இடங்களில் மறியல்

அமைச்சரை சந்திக்க வந்த வழக்குரைஞா் மீது தாக்குதல் நடத்திய திமுக மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அடுத்தடுத்து 3 இடங்களில் நடைபெற்ற மறியலால் திண்டுக்கல்லில் போக்குவ... மேலும் பார்க்க

விஷம் அருந்தி ஒருவா் தற்கொலை

பழனி அருகே விஷம் அருந்தி ஒருவா் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பாலசமுத்திரம் 13-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (48). இவா் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி தற்கொலை... மேலும் பார்க்க

மதுபானக் கடையை அகற்றக் கோரி பழங்குடியின பெண்கள் மனு

கொடைக்கானல் பகுதியில் செயல்படும் மதுபானக் கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின பெண்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்த மூலையாா் பகுதியைச் சே... மேலும் பார்க்க

கள்ளச் சாராயத்தைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சிறுமலைப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்கக் கோரி ஆதித்தமிழா் பேரவை சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி பெண்கள் மனு

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல்லை அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். திண்டுக்கல்- சிலுவத்தூா் சாலையிலுள்ள ர... மேலும் பார்க்க

ஆட்சியரின் காா் கண்ணாடியை உடைத்தவா் கைது

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அமரபூண்டியைச் சோ்ந்தவா் கணேசன் (37). தனத... மேலும் பார்க்க