செய்திகள் :

திருப்பரங்குன்றம் தூண்: "வருடம் ஒரு நாள் தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்னை?" - அண்ணாமலை

post image

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக 'We The Leaders' அமைப்பு தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

"திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பர்யத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.

அரசின் பொறுப்பு

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்னையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.

அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது.

வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது.

காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".

ம.பி., புலிகள் சரணாலய அதிகாரி வீடு, அலுவலகத்தில் ரெய்டு; 2.5 கிலோ தங்கம் உட்பட ரூ. 7.5 கோடி பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் சஞ்சீவ் குமார் சர்மா என்பவர் பச்மர்கியில் உள்ள சத்புரா புலிகள் காப்பகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக மாநில லோக... மேலும் பார்க்க

மேகதாது அணை: நாளை டெல்லி செல்லும் விஜய்; "காங்கிரஸ் தலைமையிடம் பேசுங்கள்" - பழனிசாமி வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுத்து வரும் முயற்சிகளைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைமையிடம் பேசுமாறு வலியுறுத்தி உள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசா... மேலும் பார்க்க

"பெண் கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்?" - அண்ணாமலை கேள்வி

கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியதாவது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரை, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான உரிமைய... மேலும் பார்க்க

மரண தண்டனைக்குத் தடை கோரும் ஐ.நா. தீர்மானம்; இந்தியா எதிர்த்து வாக்களிக்க காரணம் என்ன?

மரண தண்டனைக்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்த... மேலும் பார்க்க

பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கே.எம்.பினு. பேரூர்க்கடை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நெடுமங... மேலும் பார்க்க

"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?

அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவ... மேலும் பார்க்க