செய்திகள் :

மரண தண்டனைக்குத் தடை கோரும் ஐ.நா. தீர்மானம்; இந்தியா எதிர்த்து வாக்களிக்க காரணம் என்ன?

post image

மரண தண்டனைக்குத் தற்காலிகத் தடை விதிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டுவரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து இல்லை என்றும், தங்களது சட்டங்களையும் தண்டனைகளையும் தீர்மானிக்கும் உரிமை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபையின் மூன்றாவது குழுவின் 43-வது முழுமையான கூட்டத்தில் இந்தியாவின் இந்த நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.

பாவிகா மங்களானந்தன்
பாவிகா மங்களானந்தன்

இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை?

இந்தியா சார்பில் பேசிய ஐ.நா-வுக்கான இந்தியாவின் முதல் செயலாளர் பாவிகா மங்களானந்தன், "மரண தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து ஏதுமில்லை.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) 6-வது பிரிவு, சில கட்டுப்பாடுகளுடன் மரண தண்டனையைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

கடுமையான மற்றும் முறையான சட்ட நடைமுறைகளுக்குப் பிறகே மரண தண்டனை வழங்கப்படுகிறது.

எனவே, இதனை அரசு நடத்தும் கொலை என்று சித்தரிப்பது அபத்தமானது.

சட்டத்திற்குப் புறம்பான, விசாரணையற்ற அல்லது தன்னிச்சையான கொலைகள் சட்டவிரோதமானவை மற்றும் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.

இவை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஆழமாகப் பாதிப்பதுடன், மிக அடிப்படையான மனித உரிமையான வாழும் உரிமையைப் பறிக்கின்றன.

'அரிதிலும் அரிதான' வழக்குகளில் மட்டுமே விதிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ தண்டனையாக மரண தண்டனையை இந்தியா தருகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி எனக் கருதுவது, உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை கட்டாயம் உறுதி செய்யப்பட வேண்டியது மற்றும் தண்டனையைக் குறைப்பதற்கான சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இந்தியச் சட்டத்தில் இருக்கிறது" என்று பேசினார்.

மரண தண்டனை
மரண தண்டனை

மரண தண்டனைத் தடை தீர்மானத்திற்கு எதிரான இந்தியாவின் இந்த வாக்கு, 2016, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் எடுத்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியாகும்.

அமெரிக்கா எதிர்ப்பு; பிரான்ஸ் ஆதரவு

இறையாண்மை மற்றும் தீர்மானத்தின் வாசகங்கள் குறித்த கவலைகளைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவும் இந்தத் தடை தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

அதே சமயம், பெரும்பான்மையான வாக்குகளுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்றுள்ள பிரான்ஸ், உலகளவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான ஒரு முக்கியப் படி இது என்று குறிப்பிட்டுள்ளது.

பயிற்சி பெண் மருத்துவரிடம் பாலியல் அத்துமீறல்? DYFI போராட்டம்; அரசு டாக்டர் கைதான பின்னணி என்ன?

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கே.எம்.பினு. பேரூர்க்கடை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நெடுமங... மேலும் பார்க்க

"Online டெண்டர் வேண்டாம் என்பது சட்டவிரோதம்"- ஊழியர் சங்கம்; என்ன நடக்கிறது ஊரக வளர்ச்சித் துறையில்?

அரசுப் பணிகளுக்கு டெண்டர் விடும்போது நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஆன் லைனில் (மின்) மட்டுமே டெண்டர் விட வேண்டுமென 2023 ம் ஆண்டு அரசாணை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. ஆனால் அதை மதிக்காமல் தற்போது மேனுவ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தான் நகர்வு? ஹபீஸ் சயீத், மசூத் அசார் ரகசிய இடங்களுக்கு மாற்றம்

'இந்தியா தாக்குதல் நடத்தலாம்' என்கிற பயத்தால், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆகியோர் பாகிஸ்தானில் உள்ள பலத்த பாதுகாப்பு கொண்ட ரகசிய இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ள... மேலும் பார்க்க

"மசூதிகள் இடிக்கப்பட்ட இடங்களுக்கு யாதவ் சென்றிருக்கிறாரா?" - உபியில் பிரசாரத்தைத் தொடங்கிய ஒவைசி

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால் சமாஜ்வ... மேலும் பார்க்க

'பெண்ணின் ரகசிய வாக்குமூலம்; 8 மணி நேர சோதனை; 3 குழிகள்'- ஜெம் வீரமணி வீடு சோதனை; பின்னணி என்ன?

போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் உடல்கள் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் 8 மணி நேரம் சோதனை செய்து முடித்திருக்கின்றனர்.ஜெம் ... மேலும் பார்க்க

'குழி தோண்டி நீச்சல் குளத்தைச் சேதப்படுத்திட்டாங்க' - ஜெம் வீரமணி குடும்ப வக்கீல் குற்றச்சாட்டு

போக்சோ வழக்கில் கைதான ஜெம் வீரமணியின் ராயப்பேட்டை வீட்டில் சிறுமிகளின் உடல் எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா எனக் காவல்துறையினர் ஜேசிபி மூலம் குழி தோண்டி சோதனை செய்திருந்தனர். சோதனையின் முடிவில் உடல்கள... மேலும் பார்க்க