செய்திகள் :

திருப்பூர்: கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, உயிரை மாய்த்த கணவன் - அதிர்ச்சி பின்னணி!

post image

திருப்பூர் மாவட்டம், கருமாரபாளையம் அருகில் உள்ள மூகாம்பிகை நகரில் ஒரு வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர், உள்பக்கம் தாழிடப்பட்ட வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அழுகிய நிலையில் பெண்ணின் சடலமும், அருகில் தற்கொலை செய்து கொண்ட ஆண் ஒருவரின் சடலமும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான சரவணன் அவரின் 20 வயதான அவரின் மனைவி ஸ்ரீமதி ஆகியோரின் சடலம் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ஸ்ரீமதியை கொலைசெய்த கணவன் சரவணன், அந்த கொலையை மறைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதையும் கண்டறிந்துள்ளனர்.

murder
Murder

இந்த அதிர்ச்சி பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் இந்த பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். கருவுற்றிருந்த செவிலியர் ஸ்ரீமதி வேலைக்கு செல்ல முடியாமல் இருந்திருக்கிறார். மது பழக்கத்திற்கு அடிமையான சரவணன் முறையாக வேலைக்கு செல்லாததால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மனைவி மீது சந்தேகம் கொண்ட சரவணன், சில தினங்களுக்கு முன்பு அவரை கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார். கொலையை மறைக்க பல்வேறு முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனால், முடியவில்லை. அந்த பயத்தில் தானும் தற்கொலை செய்து உயிரை மாய்த்திருக்கிறார். காதலித்து வாழ்வை சந்தோஷமாக தொடங்கிய இருவரின் வாழ்க்கையும் சோகத்தில் முடிந்திருக்கிறது. தொடர் விசாரணை மற்றும் உடற்கூறாய்வு முடிவுகளுக்குப் பிறகு மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் " என்றனர்.

2 வார `டிஜிட்டல்' கைது: போலீஸார் உஷார் செய்த பிறகே ரூ.8 கோடி சைபர் மோசடியை உணர்ந்த 73 வயது முதியவர்

முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை சி.பி.ஐ அதிகாரிகள் அல்லது அமலாக்கப்பிரிவு... மேலும் பார்க்க

ஹைதராபாத்: `புகார் கூறிய பெண் அதிகாரி என்னுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்...' - உதய்கிருஷ்ணா ஐபிஎஸ்

"என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது, பாலியல் புகார் கொடுத்த பயிற்சி அரிகாரி என்னுடன் ஏற்கெனவே ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்தான்" என்று குற்றம்சாட்டப்பட்ட பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் மனு த... மேலும் பார்க்க

பேராசிரியையுடன் நெருக்கம்; போட்டோ, வீடியோவை கணவருக்கு அனுப்பிய பேராசிரியர் - விசாரிக்கும் போலீஸ்!

திருச்சி, திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கழகம் இயங்கி வருகிறது. அங்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் பேராசிரியரா... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு லாக்கப் மரணம்?:``படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்"- உதயநிதி கண்டனம்

தூத்துக்குடி, அமுதா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம் (26). இவர் அரசு மதுபான கடை பாரில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி மதுபான கடை மூடிய பின்பு, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மீண்டும் ஒரு காவல் மரணம்?- விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பியவர் இறப்பு

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்றதாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட டாஸ்மாக் பார் ஊழியர் தலையில் காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

திருச்சி: சிகிச்சை பெற்று வரும் மூதாட்டியின் கட்டை விரலைக் கடித்த எலி - அரசு மருத்துவமனை அவலம்!

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் கொடி (வயது: 60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்... மேலும் பார்க்க