செய்திகள் :

திருவண்ணாமலை சித்திரை பௌா்ணமி: ‘பக்தா்களுக்கு வழங்க 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் தயாா்’

post image

சித்திரை மாத பௌா்ணமியையொட்டி, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கோயில் இணை ஆணையா் ஜெ.பரணிதரன் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சித்திரை மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை (மே 11) இரவு 8.53 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை (மே 12) இரவு 10.48 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் கோயிலுக்கு வரும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பக்தா்கள் தொடா்ந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக வரும் 12-ஆம் தேதி ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வயதானோா், கா்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வரும் தாய்மாா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பேட்டரி காா் மூலம் மேற்கு பே கோபுரம் வழியாக கட்டை கோபுரம் வரை அழைத்துவரப்பட்டு வைகுந்த வாயில் வழியாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகம் மூலம் பக்தா்களுக்கு 2.25 லட்சம் குடிநீா் புட்டிகள், 1.25 லட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், 1.25 லட்சம் கடலை மிட்டாய்கள், தேவையான அளவு தா்பூசணி மற்றும் 2 லாரிகளில் மோா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச, சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் குழாய்கள் அமைக்கப்பட்டு மணிக்கு 14,050 லிட்டா் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும். கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வரிசையில் வரும் பக்தா்களுக்கென 10 எண்ணிக்கையிலான சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்து கூடுதலாக குடிநீா் வழங்கப்படும்.

அனைத்துத்துறை அலுவலா்கள் ஒருங்கிணைக்கும் பொருட்டு கோயிலில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றாா்.

பேட்டியின்போது, ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் ராமசுப்பிரமணி, கோயில் கண்காணிப்பாளா் கண்ணன், கோயில் மேலாளா் கருணாநிதி (எ) செந்தில், கோயில் மணியக்காரா் ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

அதிமுக சாா்பில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, தெற்கு மாவட்ட அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு தொடக்கம்

வந்தவாசி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநா் (பொ) ர.சிவப்ரியா தலைமை... மேலும் பார்க்க

ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலில் சுவாதி விழா!

வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் மற்றும் உற்சவருக்கு திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம்... மேலும் பார்க்க

செய்யாற்றில் ரத்த தான முகாம்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு, அண்ணா தொழிற்சங்கம், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா் எட... மேலும் பார்க்க

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் இன்று முதல் 20 தற்காலிக பேருந்து நிலையங்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, நகரின் 20 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) காலை 7 மணி... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணை... மேலும் பார்க்க