செய்திகள் :

திருவண்ணாமலை மகா தீபம்: `தளர்வான கற்பாறைகளால் ஆபத்து' - பக்தர்கள் மலை ஏறத் தடை!

post image

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 24-ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

மகா தீபம்

கடந்த ஆண்டு, `பெஞ்சால்' புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன்தொடர்ச்சியாக அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு உண்டானது. இதனால், உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது.

தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு `டிட்வா' புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்சு அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில், மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மையப் பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு

எனவே, ``புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. `மலை ஏற முயற்சிக்க வேண்டாம்' " என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மகாருத்ர ஹோமம்: ஆயுளில் ஒருமுறையாவது செய்ய வேண்டியது ஏன்? 8 பரிகாரங்கள் சொல்கிறது சாஸ்திரம்!

மகாருத்ர ஹோமம்: மகாருத்ர ஹோமத்தை நடத்தினாலோ, அதில் கலந்து கொண்டு சங்கல்பித்தாலோ எல்லா காரியங்களும் தடையின்றி நடைபெறும். தரித்திரத்தில் இருப்பவர் கோடீஸ்வரனாக மாறுவர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.முன்பதி... மேலும் பார்க்க

விருதுநகர்: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம்; சோதனை ஓட்டம் வெற்றி!

196 அடி உயரம் உடைய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு ஈடு இணை மண்ணுலகத்தில் ஏதுமில்லை என்றும், விண்ணுலகத்தில் உள்ள மேருமலைக்கு ஒப்பானது என்றும் கம்பர் பாடியுள்ளார்.இத்தகைய பெருமையும் சிறப... மேலும் பார்க்க

நினைத்த காரியங்கள் வெற்றி பெற வரமளிப்பாள் காரப்பாக்கம் கங்கை அம்மன் திருவிளக்கு பூஜை; அனுமதி இலவசம்!

2025 டிசம்பர் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை ஓ.எம்.ஆர் காரப்பாக்கம் கங்கை அம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம். அது... மேலும் பார்க்க

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்

மகாருத்ர ஹோமம்: 2026 உங்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும்! ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் பெருகும் அதிசயம்! 2026 ஜனவரி 2-ம் தேதி மார்கழி ஆருத்ரா அபிஷேக நன்னாளில் கோவை ஆர்.எஸ்.புரம் ஸ்ரீஅண்டவாணர் திருக்கோயில... மேலும் பார்க்க

திருப்பூர்: மதநல்லிணக்கத்தைப் போற்றும் `தர்கா - கார்த்திகை தீப' வழிபாடு!

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னை எழுந்துள்ள நிலையில், மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில், திருப்பூர் அருகே உள்ள ஒரு தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்று வ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: அதிகாலை ஏற்றிய பரணி தீபம்; மாலை மலை உச்சியில் மகாதீபம்!

திருக்கார்த்திகை தீபம் என்றாலே திருவண்ணாமலைதான் நம் நினைவுக்கு வரும். நினைத்தாலே முக்தி தரும் இந்த அற்புதமான தலத்தில் ஏற்றப்படும் பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஆகியவற்றைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் த... மேலும் பார்க்க