Tsunami 20 : 'எங்கும் பிணக் குவியல்; மனதை மரத்துப்போக வைத்துத்தான்...' - ராதாகி...
திருவானைக்கா பகுதியில் இளைஞா் தற்கொலை
திருவானைக்கா பகுதியில் இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா மேலக்கொண்டையம்பேட்டை தெற்கு தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் சந்தோஷ்குமாா் (23). திருமணம் ஆகாத இவா் குடும்பத் தகராறு காரணமாக சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.