செய்திகள் :

திருவாரூர்: டேங்கில் இருந்து உப்பு கலந்து வரும் குடிநீர்; உயிரிழப்பு ஏற்படுவதாக மக்கள் அச்சம்

post image

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள பைத்தஞ்சேரி பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் அதிக அளவு உப்புத்தன்மையுடன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மக்கள்

இந்த உப்பு நீரைத் தொடர்ந்து குடித்து வருவதால் சிறுநீரகத் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் நிரந்தரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இந்நிலையில், குடிநீரில் மேலும் உப்பு அதிகரித்து விட்டது. இதைக் குடிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இளம் வயதுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் திடீரென உயிரிழக்கின்றனர்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே வருகிறது. இதனால் அப்பகுதியினர் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். குடிநீரில் அதிகமாக இருக்கும் உப்பே இவற்றுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனாலும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து எதனால் பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கவும் மருத்துவ முகாம் நடத்தி நோய் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

குடிநீர் எடுத்துச் செல்லும் பெண்கள்
குடிநீர் எடுத்துச் செல்லும் பெண்கள்

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், "கிட்டதட்ட 15 ஊராட்சிகளில் குடிநீர் உப்பாக மாறி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பைத்தஞ்சேரி கிராமத்தினர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளோம். 10 பேர் திடீரென இறந்து விட்டனர். நான்கு பேர் டயாலிசிஸ் செய்து வருகின்றனர். சிலர் சிகிச்சையிலும் இருக்கின்றனர். இவற்றுக்குக் காரணம் உப்பு கலந்த தண்ணீர்தான் என நாங்கள் கருதுகிறோம்.

வேறு எதுவும் காரணமாக இருந்தாலும் ஆய்வு செய்து அதைக் கண்டு பிடித்து எங்களைக் காக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. தினக்கூலிகளான எங்க கோரிக்கைக்குச் செவி சாய்த்து உடனடியாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

டாஸ்மாக் கிடங்கு: 'மருத்துவத்துறை நிதி பயன்படுத்தப்படவில்லை.!'- மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்

"டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு... மேலும் பார்க்க

புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ முடியுமா?

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கான சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அங்கு அவருடன் இரண்டு ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஒரு பெட்டியை எடுத்துச் செல்க... மேலும் பார்க்க

கைகளைக் கட்டிப்போட்டு மாணவனைத் தாக்கிய ஆசிரியர்; திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சாய்ராம் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவரின் 3 வயது... மேலும் பார்க்க

உடுமலை: அலட்சிய மருத்துவமனையால் பறிபோன இளைஞரின் கால்; ரூ. 35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம் மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் (24) 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, உடுமலை அரசு மருத... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு நோ... அவதூறு வழக்கு யெஸ் டு தொகுதி மறுவரையறை: குழப்பத்தில் திமுக MP-க்கள்! | கழுகார்

அவதூறு வழக்கு ‘யெஸ்’பாலியல் வழக்கு ‘நோ’...கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிரணி ஆணையமே அறிக்கை கேட்டிருக்கும் சூழலிலும் தமிழக காவ... மேலும் பார்க்க

`தலைமைக்குப் புகார்... அனுப்பியவர் மீதே நடவடிக்கையா?' - வெடிக்கும் பெரம்பலூர் விசிக விவகாரம்

"கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்சிக்கு விரோதமான செயல், குற்றச் செயல்களில் ஈடுபட்டது பற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பினேன். உடனே, நான் வகித்து வந்த மா... மேலும் பார்க்க