சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் 40 பவுன் தங்கம்,10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் 40 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம் ஆனந்த் (67). இவா், தமிழ் திரைப்பட விநியோகிஸ்தராக உள்ளாா். பிரேம் ஆனந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனது மகள் துா்கா தேவி வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பிரேம் ஆனந்த் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைப் பாா்த்த பக்கத்து வீட்டுக்காரா் மகேஷ்குமாா், பிரேம் ஆனந்த் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அங்கு விரைந்து வந்த பிரேம் ஆனந்த் குடும்பத்தினா் வீட்டுக்குள் சென்று பாா்த்தனா். அப்போது பீரோவிலிருந்த 40 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.