கோவையில் நடைபெற்ற RSS பேரணி; முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு ...
தீபாவளியை ஜொலிக்கவைக்கும் GRT ஜுவல்லர்ஸ் - தங்கத்துக்கு வெள்ளி இலவசம் மற்றும் பல சலுகைகள்!
ஐஸ்வர்யம், சந்தோஷம் மற்றும் ஒளியின் அடையாளமாகத் திகழும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, GRT ஜுவல்லர்ஸ் வழங்குகிறது "தங்க தீபாவளி". கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி, குடும்பத்தினருடன் இணைந்திருக்கும் அன்பான உணர்வு, ஒளிமயமான எதிர்காலத்தின் நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இந்தக் கொண்டாட்டம், தலைமுறைகள் கடந்தும் நினைவுகளைச் சுமக்கும் நகைகளுடன் இந்தத் தீபாவளியை இன்னும் சிறப்பானதாகக் கொண்டாட வாடிக்கையாளர்களை அழைக்கிறது.
இதனுடன் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான குறிப்பிட்ட காலச் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வாங்கும் தங்கத்தின் எடைக்கு நிகரான வெள்ளி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும், பழைய தங்கத்தை மாற்றும்போது ஒரு கிராமுக்கு ₹150 கூடுதல் மதிப்பு, வாங்கும் ஒவ்வொரு காரட் வைரத்திற்கும் 25 கிராம் வெள்ளி இலவசம், ஒவ்வொரு காரட் அன்கட் வைரத்திற்கும் 2 கிராம் வெள்ளி இலவசம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் வெள்ளிப் பொருட்களின் சேதாரத்தின்(VA) மீது 25% தள்ளுபடி, ஒரு கிராம் பிளாட்டினம் நகை வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம், வெள்ளி நகைகளின் MRP மீது 10% தள்ளுபடி ஆகிய சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன.
மேலும், HDFC வங்கியின் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது சிறப்புஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக, எண்ணற்ற கொண்டாட்டங்கள். வாழ்வின் முக்கியத் தருணங்கள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளின் ஓர் அங்கமாக GRT ஜுவல்லர்ஸ் திகழ்ந்து வருகிறது. 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான கைவினைத்திறன் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு தனது புகழ்மிக்க பயணத்தை வளர்த்தெடுத்துள்ளது.
தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் 69 ஷோரூம்களுடன், நகைத் துறையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய பெயராகத் திகழ்கிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்கள் எனப் பல்வேறு வகைகளில், பாரம்பரியத்தின் அழகையும் நவீன காலத்தின் நேர்த்தியையும் ஒருங்கிணைக்கும் வகையில் GRT ஜுவல்லர்ஸின் நகைத் தொகுப்புகள் வடிவமைக்கப்படுகின்றன.

தங்க தீபாவளி விஷேச சலுகையைப் பற்றி GRT ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் திரு. “ஆனந்த்” அனந்தபத்மநாபன் மற்றும் திரு.ஜி. ஆர். ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தீபாவளி என்பது வளமும், நன்மைகளும் நிறைந்த, தலைமுறைகளாய் போற்றப்படும் பாரம்பரியங்கள் மூலம் குடும்பங்களை ஒன்றிணைக்கும் மகிழ்ச்சி ஒளிரும் பண்டிகையாகும். அழகிய நகைகளையும், பண்டிகைக காலச் சலுகைகளையும் ஒருங்கிணைக்கும் எங்களது தங்க தீபாவளி மூலம் இந்தச் சிறப்பான தருணத்தை மேலும் விஷேசமாக்குவதில் ஜுவல்லர்ஸ் பெருமகிழ்ச்சி அடைகிறது.
பாரம்பரியத்தையும் சமகால நேர்த்தியையும் பிரதிபலிக்கும் நகைகள் மூலம் ஒவ்வொரு கொண்டாட்டத்தையும் மறக்க முடியாததாக மாற்றுவதே எங்களது விருப்பம். அழகிய நகைகளுடன் வளமும், மகிழ்ச்சியும் மின்னும் இந்த தீபாவளித் திருநாளில், எங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.













