பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர் மிரட்டல்... லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹரி பாக்ஸர் ...
'தூங்கியும் சம்பாதிக்கலாம்' - 60 நாட்கள் தூங்கி ரூ.9.6 லட்சம் வருமானம் ஈட்டிய பெண்
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் தூங்குவதை லாபகரமான வாய்ப்பாக மாற்றி, தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.6 லட்சம் பெற்றுள்ளார். வேக்பிட் என்ற நிறுவனம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்து இருந்தது. அதாவது தூங்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்க 2 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் . அவர்களின் பிரதான வேலை எப்போதும் தூங்குவதுதான். இப்போட்டிக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொண்ட 2 லட்சம் பேரிடம் பல்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது. பல சுற்றுப்போட்டிக்கு பிறகு இறுதியில் இப்போட்டிக்கு 10 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்கள் 60 நாட்கள் தூங்கும் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தூங்குவது மட்டும்தான் பிரதான வேலை என்றாலும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு வித்தியாசமான வேலைகளை கொடுத்து செய்யச்சொல்வார்கள். அதுவும் தூங்குவது போன்றுதான் இருக்கும். வாராந்திர பணிகளில் ஸ்லீப் சினிமா அடங்கும். அதில் போட்டியாளர்கள் பிரபலமான திரைப்பட காட்சிகளை தூக்கம் தொடர்பான திருப்பத்துடன் உருவாக்கம் வேண்டும்.

அதோடு இந்த சவால்களில் தோற்பவர்கள் 10 முறை போர்வை அல்லது தலையனை என்ற வார்த்தையை சொல்ல வேண்டும். இரண்டு மாதங்கள் நடந்த இப்போட்டியில், ஜினியா சாட்டர்ஜி, ரத்னகிரி மணிகண்டன் மற்றும் மெஹக் கோட் ஆகியோர் முதல் மூன்று போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த கரீம் கான், வைல்டு கார்டு என்ட்ரியாகத் உள்ளே வந்தார். இதையடுத்து இறுதிப் போட்டியில் நான்கு போட்டியாளர்கள் இருந்தனர். இதில் பிக் பெட் என்ற பெயரில் மாபெரும் இறுதிச்சுற்றில் இரண்டு முக்கிய சவால்கள் கொடுக்கப்பட்டது.
மெமரி போம் சேலஞ்ச் என அழைக்கப்படும் முதலாவது சுற்றில் குறிப்புப் படங்களைப் பயன்படுத்தி படுக்கையறை அமைப்பை மீண்டும் உருவாக்கும்போது போட்டியாளர்களின் கணிப்பு, நினைவாற்றல் ஆகியவை சோதிக்கப்பட்டன. இரண்டாவது சவாலான ஸ்லீப் ஏலத்தில், தலையணைகள், போர்வைகள், ஏர் கண்டிஷனிங் கட்டுப்பாடுகள், விளக்குகள் மற்றும் ஒலி அமைப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய தூக்க ஏற்பாடுகளை இறுதிப் போட்டியாளர்கள் ஏலம் எடுக்க வேண்டும். அவர்களின் தூக்க மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி பெறுபவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் வெற்றி பெற்ற ஜினியா சாட்டர்ஜிக்கு பரிசுத்தொகையாக ரூ. 9.6 லட்சம் கிடைத்தது. 2019 இல் தொடங்கப்பட்ட தூங்கும் போட்டியில் அதன் முதல் நான்கு சீசன்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

















