செய்திகள் :

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தை ஆந்திராவுக்கு மாற்ற முயற்சி; காய் நகர்த்துகிறாரா சந்திரபாபு?

post image

தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த பிரபல 'HD Hyundai' நிறுவனத்தின் பிரமாண்ட கப்பல் கட்டும் தளத்தை ஆந்திர பிரதேசத்திற்கு மாற்ற அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு, மத்திய அரசுடன் கொண்டுள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை ஆந்திராவின் காக்கிநாடா பகுதிக்கு ஈர்க்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'HD Hyundai'
'HD Hyundai'

நிறுவனத்தைக் கவரும் வகையில் ஆந்திர அரசு பல்வேறு கூடுதல் சலுகைகளையும், சிறப்புத் திட்டங்களையும் வழங்க முன்வந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு மற்றும் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இந்தப் பிரமாண்ட திட்டம் தமிழ்நாட்டிற்கு வருவது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது ஆந்திராவின் இந்த நகர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த முக்கியமான திட்டத்தை தமிழ்நாட்டிலேயே தக்கவைக்க தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

`பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிகள்; தீண்டாமை... உளவியல் ஒடுக்குமுறை!' - மாணிக்கம் தாகூர்

புதுக்கோட்டை அருகே ஓடும் அரசுப் பேருந்தின் கதவு திடீரென திறந்ததில், பேருந்தில் பயணம் செய்த 10 பள்ளி மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு... ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சாலுவராய சாமி நேரில் சந்தித்து வலியுறுத... மேலும் பார்க்க

விதி 110: ``நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகம்" - சீமான் காட்டம்

கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும... மேலும் பார்க்க

TN Assembly : முதல்வர் விஜய் Vs எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி; அவையில் அனல் பறந்த விவாதம் | Full Story

சட்டமன்றத்தில் முதல்வர் கையில் வைத்திருக்கும் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதில் முதல்வர் விஜய்யும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் காரசாரமாக கருத்துகளை பகிர்ந்து கொண்டன... மேலும் பார்க்க

ஈரான் பிரதமரைச் சந்தித்த மோடி: `ஈரானுக்கு உதவினால் பொருளாதார தடை' - அமெரிக்கா எச்சரிக்கை

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.மோடி - ஈரான் பிரதமர் சந்திப்புஅங்கே ரஷ்ய அத... மேலும் பார்க்க

"விஜய் கன்னியாகுமரி போனாரே... ஒரு தொகுதியாச்சு ஜெயிச்சீங்களா?" - உதயநிதி vs ஆனந்த்

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் தவெக அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருந்தது.அமைச்சர் ஆனந்த்... மேலும் பார்க்க