செய்திகள் :

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு:``அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது"- அரசு பதில்

post image

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பாக 20 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ``ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், ``அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 31) நடந்தது.

இந்த விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது." எனத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?" என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர்.

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்லும் இந்த மருத்துவமனை... மேலும் பார்க்க

'குற்றம்சாட்டப்பட்ட என்னுடைய மருமகள், JCD பிரபாகர், லீமா ரோஸின்..!'- விஜய் உரைக்கு இ.கருணாநிதி பதில்

நேற்று சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றியிருந்தார். அதில் சர்க்காரியா கமிஷன் முதல் மிசா வரை பலவற்றைக் குறிப்பிட்டுத் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அதில் தி... மேலும் பார்க்க

"மூன்று கோப்புகள் இருப்பதாக முதல்வர் சொன்னார், ஏன் அதைப் பற்றி பேசவில்லை? சம்மந்தமே.!" - பெ.சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சட்டமன்ற செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். "சட்டமன்றம் சண்டைமன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி... மேலும் பார்க்க

"தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎம் பங்கேற்காது"- பெ.சண்முகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாளை (செப்.9) கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் சி.பி சண்ம... மேலும் பார்க்க