செய்திகள் :

தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சிறார்கள்; புனே போலீஸ் மீது வழக்கு; மனித உரிமை கமிஷன் உத்தரவு

post image

புனேயில் கொலை வழக்கு ஒன்றில் போலீஸாரிடம் சரணடைந்த சிறார்கள் 8 பேரை, போலீஸ் நிலையத்தில் ஐந்து நாட்கள் சட்டவிரோத வைத்திருந்து அடித்து உதைத்துள்ளனர்.

அதோடு அந்தச் சிறார்களை பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தாமல் போலீஸ் நிலையத்தில் வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். அவர்களது குடும்பத்தினர் ஒருவர் இதை எதிர்த்ததையடுத்து, அந்தச் சிறார்கள் சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறார்கள் போலீஸ் வாகனத்தின் முன்பகுதியில் கட்டிவைக்கப்பட்டு, போலீஸ் நிலையம் வரை பொதுவெளியில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FIR
FIR

பொதுவெளியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதுடன் மேலும், பொது இடங்களில் முழங்காலிடவும், முழங்கால்களிலேயே நடந்து செல்லவும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து மகாராஷ்டிரா மனித உரிமை கமிஷனில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடைய போலீஸார் 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அவர்களில் போலீஸ் கமிஷனர் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. புனே போலீஸ் கமிஷனர் அந்தச் சிறுவர்களை சிறார் நீதி வாரியத்தின் முன் ஆஜர்படுத்தக் கோராததால், அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டதாக ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு செல்வது என்பது, திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு உளவியல் ரீதியான தாக்குதல் நடவடிக்கையே தவிர வேறல்ல இது சிறார்களின் இயல்பான கண்ணியத்தைப் பறித்து, அவர்களை நிரந்தரமாகக் குற்றவாளிகள் என முத்திரை குத்துகிறது என்று மகாராஷ்டிர மாநில மனித உரிமைகள் கமிஷன் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறார்களில் நால்வர் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது 'பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின்' கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரைத்துள்ளது. சிறப்பு ஐஜி ஒருவரை உள்ளடக்கிய மனித உரிமை கமிஷனின் உண்மை கண்டறியும் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘ரூ.20,000 கடனை அடை’- பிரசவத்திற்குச் செல்ல விடாமல் தடுத்த உரிமையாளர்; தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், அரக்கோணம் சாலை வெள்ளை கேட் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த 6 மாதங்களாக மரம... மேலும் பார்க்க

கோவை: வடமாநிலத் தொழிலாளியைக் கொன்று புதைத்த 6 பேர் கைது - அதிரவைக்கும் கொலைகளால் மக்கள் அச்சம்

கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கடந்த 8ம் தேதியன்று மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் தோண்டப்பட்டு இருந்த குழிக்குள் ஒரு ச... மேலும் பார்க்க

வத்தலக்குண்டு: ரௌடியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் - பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (54). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர்மீது இரட்டை கொலை வழக்கு உட்பட 26 குற்றவழக்குகள் உள்ளன. மேலும் கொலை வழக்கில் ஆயு... மேலும் பார்க்க

மதுரை: 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழப்பு; கொலை வழக்காக பதிவுசெய்யக் கோரி ஆர்ப்பாட்டம்!

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவரின் சடலம் முட்புதர் குட்டையில் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவி... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் ரீல்ஸ் செய்த மகள்; மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற தந்தை; குஜராத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்த சோபியா பரூக்(22) என்ற பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானது. அப்பெண... மேலும் பார்க்க

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் - போலீஸில் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். ப... மேலும் பார்க்க