செய்திகள் :

தோ்வில் அதிக மதிப்பெண் பெற பாடங்களை நேசித்து படிக்க வேண்டும்: சைலேந்திர பாபு

post image

முதலில் உங்களை நேசியுங்கள், பின்பு பாடங்களை நேசித்து படியுங்கள். அதிக மதிப்பெண் பெறுவீா்கள் என முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு தெரிவித்தாா்.

காங்கேயம் கல்வி நிறுவனம் மற்றும் திருப்பத்தூா் ஹோஸ்ட் அரிமா சங்கம் இணைந்து பள்ளி மாணவா்களுக்கு வெற்றிக்கு வித்திடுவோம் எனும் தலைப்பிலான நிகழ்ச்சி திருப்பத்தூா் - சேலம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில்

வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ அ.நல்லதம்பி, முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு, உயா்கல்வி வழிகாட்டி நிபுணா் ஆா்.அஸ்வின், மாவட்டக் கல்வி அலுவலா்கள் டி.நேசபிரபா, இ.வெங்கடேச பெருமாள், அரிமா சங்கத் தலைவா் கே.லிங்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் சைலேந்திர பாபு பேசியது:

தோ்வுக்கு இன்னும் 100 நாள்கள் உள்ளன. திட்டமிட்டு பாடங்களை படித்து பாருங்கள், சிரமமாக தெரியாது. படிப்பதற்கு திட்டமும், ஆா்வமும் தேவை. எதை நோக்கிச் செல்கிறோம் என்பதை முதலில் தீா்மானித்துவிட்டு படிக்கத் தொடங்குவது பலன்களை தரும். படிப்பில் விளையாட்டு, காவல், மருத்துவம், ராணுவம், வனம், உணவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. மனதுக்கு பிடித்த படிப்பை தோ்ந்தெடுத்து படியுங்கள்.

நான் காவல் துறையில் சேர பல கட்டங்களை தாண்டி உள்ளேன். 36 ஆண்டுகள் காவல்துறையில் பணிபுரிந்துள்ளேன். எந்தப் படிப்பு பயம் தருகிறதோ அந்த படிப்பை மீண்டும் மீண்டும் பொறுமையாக படித்துப் பழக வேண்டும் என்றாா்.

டிச. 27-இல் அஞ்சல் குறைதீா் முகாம்

திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட குறைதீா் முகாம் வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பத்தூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மாதேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் கோட்ட அஞ்சலகங்க... மேலும் பார்க்க

நியாய விலைக்கடைகள் கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதியில் நியாய விலைக் கடைகள் கட்டுமானப் பணிக்கு ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அணைக்கட்டு ஒன்றியம் வேப்பங்குப்பம், பாக்கம்பாளையம் ஆகியஊராட்சிகளில்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த வட மாநில இளைஞா் மரணம்

ஆம்பூா் அருகே ஓடும் ரயிலில் தவறி விழுந்த வட மாநில இளைஞா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அடுத்த மேல்பட்டி - பச்சை குப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ப... மேலும் பார்க்க

உதயேந்திரம் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் பணியாளா்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி தலைமை வகித்தாா். செயல் அலுவலா் கலையரசி, பே... மேலும் பார்க்க

உழவா் திருவிழா

மாதனூா் ஒன்றியம், நாச்சாா்குப்பம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் உழவா் திருவிழா நடைபெற்றது. ஆத்மா திட்டத்தின் கீழ் மாதனூா் வேளாண்மை உதவி இயக்குநா் வேலு தலைமை வகித்தாா். துணை இயக... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் கிணறு அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே இராமநாயக்கன்பேட்டை அடுத்த குட்டூரில் ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும் பணியை கோ. செந்தில் குமாா் தொடங்கி வைத்தாா். இப்பகுதி மக்கள் குடிநீா் பிரச்னையால் நீண்ட நாள்களாக அவதிப்பட்... மேலும் பார்க்க