செய்திகள் :

KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' - ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

post image

தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த நடிகர் ரஜினியும் - நடிகர் கமலும் தவிர்க்கமுடியாதவர்கள்.

கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு' படத்தில் ரஜினியும், கமலும் சேர்ந்து நடித்தனர். அதன்பிறகு நெல்சன் இயக்கத்தில் இப்போது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் ப்ரமோ ஷூட்டிங் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், அனிருத் இசையில் உருவாகும் படத்தின் ப்ரமோவை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

இன்று 12:07 மணிக்கு வெளியாகும் ப்ரமோவைக் காண, இப்போதே ரஜினி, கமல் ரசிகர்கள் கடந்து, அனைத்து சினிமா ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் தன் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``வரலாறு எப்போதும் திரும்புவதில்லை... ஆனால், அப்படி ஒருமுறை திரும்பும்போது அது தலைமுறைகள் கொண்டாடும் ஒரு திருவிழாவாக மாறுகிறது!

இரண்டு பிரம்மாண்ட ஆளுமைகள் (KH x RK) மீண்டும் இணைந்திருக்கும் இந்த தருணம், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்திற்கு மிகுந்த பெருமையும் உணர்ச்சிப்பூர்வமான ஒரு தருணமுமாகும். நாம் அனைவரும் திரையில் பார்த்து வியந்து வளர்ந்த இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம், ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைச் சாத்தியமாக்கிய இயக்குநர் நெல்சனின் அசாத்தியமான உழைப்பிற்கும், திறமைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்த பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு நம் 'ராக்ஸ்டார்' அனிருத் தனது இசையால் மேலும் பலம்சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பட... மேலும் பார்க்க

Soodhu Kavvum: மீண்டும் திரையில் சூது கவ்வும்; மருமகன் படத்தை ரிலீஸ் செய்யும் மாமனார்!

2013-ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விஜய் சேதுபதியின் 'சூது கவ்வும்'. சேதுபதிக்கு பெரும் உயரத்தையும், அடையாளத்தையும், எந்த பாத்திரத்தையும் ஏற்று நடிக்க முடியும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி... மேலும் பார்க்க

"அவர் வருவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, ஆனால்.!"- தனுஷ் குறித்து மிருணாள் தாகூர்

நடிகர் தனுஷ், நடிகை மிருணாள் தாகூர் இருவரும் காதலித்து வருவதாகவும், வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால் சமீபத்தில் 'India Today' ஊடகத்... மேலும் பார்க்க

``'சூது கவ்வும்' வெளியான போதே பெயரும் புகழும் கிடைச்சிடுச்சு; ஆனா இப்ப.." - சஞ்சிதா ஷெட்டி ஷேரிங்ஸ்

தமிழ் சினிமாவில் 'சூது கவ்வும்' படத்திற்கு தனி இடமுண்டு. அதற்கு முன் டெரராகக் காட்டிய ஆள் கடத்தல் சூதினை ஜாலி கலாட்டாவாக்கி மனதை கொள்ளை கொண்ட பெருமை 'சூது கவ்வும்’ படத்திற்கு உண்டு. நலன் குமாரசாமி இயக... மேலும் பார்க்க

KHxRK: ரஜினி - கமல் இணைந்து நடித்த படங்கள்! | Photo Album

அபூர்வ ராகங்கள் (1975)அந்துலேனி கதா (1976)மூன்று முடிச்சு (1976)அவர்கள் (1977)பதினாறு வயதினிலே (1977)ஆடு புலி ஆட்டம் (1977)இளமை ஊஞ்சலாடுகிறது (1978)வயசு பிலிச்சிந்தி (1978)தப்புத் தாளங்கள் (1978)அவள் ... மேலும் பார்க்க

KH x RK: ரஜினி கமலின் `12-07' சென்டிமென்ட்; நெல்சனுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த ரஜினி! - ப்ரோமோ அப்டேட்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், அறுபது வயதில் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று முதல்வரானார். நடிகர் திலகம் சிவாஜி, அறுபது வயதுக்குப் பிறகு சில படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்தார். சூப்பர் ஸ்டா... மேலும் பார்க்க