செய்திகள் :

Super 8: ஒரே பிரிவில் டாப் அணிகள்! காரணம் Pre Seeding; அதற்கு காரணம் இந்தியா, பாகிஸ்தான்! இது சரியா?

post image

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆனால், சூப்பர் 8 இல் க்ரூப்கள் பிரிக்கப்பட்டிருக்கும் விதம் குறித்து சில விவாதங்கள் எழுந்திருக்கிறது.

Pre Seeding முறை!

க்ரூப் A இல் இருக்கும் ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா என நான்கு அணிகளுமே லீகில் அவரவர் க்ரூப்களில் முதலிடம் வந்தவர்கள்.

சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் அணிகள்
சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் அணிகள்

க்ரூப் B இல் நியூசிலாந்து, இலங்கை, இலங்கை, பாகிஸ்தான் இருக்கின்றன. இவையெல்லாம் லீகில் அவரவர் க்ரூப்களில் க்ரூப்களில் இரண்டாம் இடம் பிடித்தவர்கள். இப்படி ஒரு போட்டி அட்டவணையை அமைய காரணம், Pre Seeding முறை தான்.

முன்பே கொடுக்கும் ரேங்கிங்!

உலகக்கோப்பை அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பாகவே புள்ளிப்பட்டியலின் படி டாப் 8 அணிகளுக்கு X1, X2, X3, X4, Y1, Y2, Y3, Y4 என ஒரு ரேங்கிங்கை கொடுத்து விட்டார்கள்.

இதன்படிதான் அட்டவணையையே தயாரித்தார்கள். இந்தியாவை வைத்து இதை விளக்கினாலே புரியும். இந்தியாவுக்கு X 1 ரேங்கிங். இந்தியா ஆடும் போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்பதற்காக X1 அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஆடும்படியே அட்டவணை வடிவமைத்திருப்பார்கள்.

அதாவது லீக் போட்டிகளில் இந்திய அணி தனது க்ரூப்பில் இரண்டாமிடம் பிடித்திருந்தாலும், சூப்பர் 8 இல் அவர்கள் க்ரூப் B க்கு சென்றிருக்கமாட்டார்கள். தொடருக்கு முன்பே X1 அணி க்ரூப் A வில்தான் இருக்கும் என்பது முடிவாகிவிட்டது.

பாகிஸ்தான் அணி
பாகிஸ்தான் அணி

Y3, Y4 அணிகள்

அதேமாதிரிதான் பாகிஸ்தானுக்கு Y3 ரேங்கிங். அவர்கள் இந்திய மைதானங்களில் போட்டிகளில் ஆட மாட்டார்கள். இலங்கை உலகக்கோப்பையை நடத்தும் நாடு. அவர்களுக்கு Y4 ரேங்கிங்.

இந்த இரண்டு அணிகளும் தங்களின் எல்லா போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே ஆடும். அதனால் சூப்பர் 8 இல் Y3, Y4 ஆடும் ஆட்டங்கள் எல்லாம் முன்னதாகவே இலங்கையில் மட்டுமே நடைபெறும்படி வடிவமைக்கப்பட்டு விட்டது.

பறிபோகும் லெவல் ப்ளேயிங்

இதில் ஒரு சின்ன சுவாரஸ்யம் மட்டுமே நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு X ரேங்கிங். ஆனால் லீகிலேயே வெளியேறிவிட்டார்கள். அதனால் அந்த X ரேங்கிங் ஜிம்பாப்வேக்கு வழங்கப்பட்டு அவர்கள் சூப்பர் 8 இல் க்ரூப் A வில் இடம்பிடித்துவிட்டார்கள்.

வழக்கமாக நியாயமாக நடத்த வேண்டுமெனில் சூப்பர் 8 இல் ஒரு க்ரூப்பில் லீகில் முதலிடம் பிடித்த இரண்டு அணிகளும் இரண்டாம் இடம் பிடித்த இரண்டு அணிகளுமே இடம்பெற்றிருக்க வேண்டும். Pre Seeding ஆல் அந்த லெவல் ப்ளேயிங் (Level Playing) தன்மை பறிபோயிருக்கிறது.

இந்தியா Vs பாகிஸ்தான்
இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா, பாகிஸ்தான் காரணம்!

இந்த Pre Seeding க்கு முக்கிய காரணம். இந்தியாவும் பாகிஸ்தானும்தான். இரண்டு நாடுகளின் போட்டிக்கு இருக்கும் வணிகமும் அதன் அரசுகளுக்கிடையே இருக்கும் பகையுமே ஐ.சி.சியை இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதற்கு முந்தையை தொடர்களிலும் இந்த முறை இருந்திருக்கிறது. வழக்கமாகவே ஐ.சி.சியின் அட்டவணை வலிமையான கிரிக்கெட் போர்டான இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்கும் என ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில கிரிக்கெட் வாரியங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

ஐ.சி.சி அரசியலை தவிர்த்தால்.!

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் லீகில் இந்திய அணி அமெரிக்காவில் எங்கும் பயணிக்காமல் ஒரே மைதானத்தில் 3 போட்டிகளையும் ஆடினார்கள். அதேநேரத்தில் இலங்கை போன்ற அணிகள் ஒவ்வொரு போட்டிக்கும் பல மணி நேரங்கள் பயணித்து கொண்டிருந்தன. இதை இலங்கை வீரர்கள் வெளிப்படையாகவே பேசியிருந்தன.

ICC
ICC

ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியிலோ, இறுதிப்போட்டியிலோ மோதும் நிலை வந்தால் அப்போட்டிகள் இலங்கையில் நடைபெறும்.

உலகக் கோப்பை தொடர் என்பது, அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் நடத்த வேண்டிய தொடர். அதில், வணிகத்தையும் சுற்றியிருக்கும் அரசியலையும் தவிர்த்தால் மட்டுமே ஐ.சி.சி யால் நியாயமான போட்டி அட்டவணைகளை வெளியிட முடியும்.

T20 WC : ``ஜிம்பாப்வே அணியை பாராட்ட வேண்டும்; ஆனால், ஏமாற்றம் எங்களுக்குத்தான்!" - மிட்சல் மார்ஷ்

ஆஸ்திரேலிய அணியின் கடைசி லீக் போட்டி, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் ஓமன் அணிக்கு எதிராக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 105 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திர... மேலும் பார்க்க

Zimbabwe: "மக்களிடம் மரியாதையைச் சம்பாதித்ததுதான் எங்களின் பெரிய வெற்றி" - கேப்டன் சிக்கந்தர் ராசா

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பி... மேலும் பார்க்க

SL Vs Zim : 'ஒன் டைம் வொண்டரல்ல!' - மீண்டும் மீண்டும் சாதிக்கும் ஜிம்பாப்வே!

டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் க்ரூப் B இல் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற... மேலும் பார்க்க

T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி' - மனம் திறந்த பாக்., வீரர் உஸ்மான் தாரிக்

Usman Tariqபாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq.2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இ... மேலும் பார்க்க

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் த... மேலும் பார்க்க

IND vs PAK: "அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது" - ஆட்டநாயகன் இஷான் கிஷன்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க