ஒரே இரவில் 'ஓகே' ஆன கூட்டணி; கச்சிதமாக முடித்த மூவர் அணி! - திமுக முகாமில் தேமுத...
SL Vs Zim : 'ஒன் டைம் வொண்டரல்ல!' - மீண்டும் மீண்டும் சாதிக்கும் ஜிம்பாப்வே!
டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் க்ரூப் B இல் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

கொழும்புவில் நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்து 178 ரன்களை அடித்திருந்தது. அந்த அணி சார்பில் பார்மில் உள்ள பதும் நிஸாங்கா 62 ரன்களையும் பவன் ரத்னாயக்கே 44 ரன்களையும் அடித்திருந்தனர். ஜிம்பாப்வே அணிக்கு 179 ரன்கள் டார்கெட்.
சேஸிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதன் ஓப்பனர்களான பிரையன் பென்னர்ட் மருமணி ஆகியோர் இணைந்து 69 ரன்களை சேர்த்தனர். மருமணியை வெல்லாலகே வீழ்த்த நம்பர் 3 இல் ரியான் பர்ல் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்களை சேர்த்திருந்தார். நம்பர் 4 இல் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார்.

ஜிம்பாப்வே இடம்பெற்றிருந்த க்ரூப் B இல் தான் ஆஸ்திரேலியாவும் இருந்தது. உலகக்கோப்பையை நடத்தும் இலங்கையும் இருந்தது. வழக்கமாக ஜிம்பாப்வே ஸ்பாய்லர்களை நிகழ்த்தும் அணியாக மட்டுமே பார்க்கப்படும். அவர்களின் வெற்றியெல்லாம் ஒன் டைம் வொண்டராக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த தடவை லீகில் 4 போட்டிகளில் மூன்றை வென்றிருக்கிறார்கள். அயர்லாந்துக்கு போட்டி மழையால் நடக்கவில்லை. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறார்கள். இலங்கையை வீழ்த்தியிருக்கிறார்கள். இது ஒரு ஸ்டேடமெண்ட். 'எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்' என நிரூபித்திருக்கிறார்கள். இந்தியா கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.




















