செய்திகள் :

'தொடர்ந்து தோற்பவன் என கேலி செய்வது இதயத்தை நொறுக்குகிறது' மேடையில் கண்ணீர்விட்ட காங்கிரஸ் வேட்பாளர்

post image

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் சட்டமன்ற தொகுதி கடந்த நான்கு தேர்தல்களில் தொடர்ச்சியாக சி.பி.எம் வசம் உள்ளது. அதற்கு முன்பும் பலமுறை சி.பி.எம் வென்றுள்ளது. இந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ யு.பிரதீபா மீண்டும் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மாநில துணைத்தலைவர் எம்.லிஜூ போட்டியிடுகிறார். இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜு மேடையில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. தேர்தல்களில் தொடர்ச்சியாக தோல்வியடைவதால் தன்னை பலரும் கேலியாக பேசுவதாகவும், அந்தப் பேச்சு இதயத்தை நொறுக்குவதாகவும், தனிப்பட்ட முறையில் மனச் சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் பேசியுள்ளார். 

காயம்குளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ கண்ணீர்மல்க பேசினார்

காங்கிரஸ் வேட்பாளர் எம்.லிஜூ காயம்குளம் தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் பேசுகையில், "நான் எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று மக்கள் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. தோல்வியடைபவன் என எதிர் கட்சியினர் கிண்டலடிப்பது இதயத்தை நொறுக்குகிறது. அவர்கள் கேலி செய்வது என்னை தனிப்பட்ட முறையில் சோர்வடையச் செய்கிறது. ஆனால் அந்தத் தோல்விகளுக்காக நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. மக்கள் அளிக்கும் தீர்ப்பை நான் மதிக்கிறேன். 

மேடையில் பேசிய எம்.லிஜூ

ஏற்கனவே மூன்று முறை நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். இப்போது நான்காவது முறையாக நான் போட்டியிடுகிறேன். மீண்டும் உங்கள் முன் நிற்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பினைத் தாருங்கள் என நான் மக்களிடம் வேண்டுகிறேன். அரசியல் பிரமுகர் என்ற நிலையில் துக்கம் அனுபவிக்கும் மக்களை தேடிச்சென்று அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும் என விரும்புகிறேன். காயம்குளம் தொகுதி மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருணையையும், அங்கீகாரத்தையும் வேண்டுகிறேன்" என அவர் கண்ணீர் மல்க வார்த்தைகள் உடைந்த நிலையில் பேசி பார்வையாளர்களின் மனதை கரைய வைத்தார்.

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை டு ஜீவிதா நாச்சியார் - சசிகலா வேட்பாளர்கள் லிஸ்ட்டில் இவர்களா?

தொகுதிப் பங்கீட்டை பிரதான கட்சிகள் ஒருவழியாக முடித்து வரும் நிலையில், தன் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வி.கே.சசிகலா அதிர்ச்சி அளிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ராமதாஸ், ... மேலும் பார்க்க

'ஃபிரிட்ஜ்க்கு போட்டியாக எல்.இ.டி டிவி?' - 'கதாநாயகனாக' கை கொடுக்குமா திமுக தேர்தல் அறிக்கை?

கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க.கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்க... மேலும் பார்க்க

ரயில் டிக்கெட் கேன்சல் செய்யப் போறீங்களா? - இனி 'இவ்வளவு' காசு பிடிக்கப் போறாங்க!

டிக்கெட்டை கேன்சல் செய்தால் எவ்வளவு ரூபாய் ரீஃபண்ட் செய்யப்படும் என்பதில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே துறை.அவை என்னென்ன? ரயில் கிளம்புவதற்கு... 72 மணிநேரத்திற்கு முன்பு, எப்போது கேன... மேலும் பார்க்க

'என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!'-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

அ.தி.மு.க-வில்எம்.ஜி.ஆர்காலத்தில்அமைச்சராகவும்,காங்கிரஸ்கட்சியில்முன்னாள்மாநிலதலைவராகவும்இருந்தவர்திருநாவுக்கரசர்.திருச்சிநாடாளுமன்றத்தொகுதிஎம்.பி-யாகஇருந்தஇவருக்குகடந்தநாடாளுமன்றதேர்தலில்சீட்மறுக்கப்... மேலும் பார்க்க