செய்திகள் :

நடிகைகளைத் தவறான கோணத்தில் வீடியோ, போட்டோ? - கண்டிக்கும் ருக்மணி வசந்த்; பின்னணி என்ன?

post image

காந்தாரா திரைப்படத்தின் நடிகைகள் ருக்மணி வசந்த், சப்தமி கௌடா ஆகியோரது இன்ஸ்டா ஸ்டோரி தற்போது வைராலாகி வருகிறது.

அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளதாவது...

"திரைப்படத் துறையில் இருக்கும் பெண்களாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு நடக்கும் ஒரு பிரச்னையைத் தீர்க்க இணைந்துள்ளோம்.

பொது நிகழ்வுகளில் நடிகைகள் கலந்துகொள்ளும்போது, அவர்களின் வீடியோ மற்றும் போட்டோக்கள் தவறான கோணங்களில் பகிரப்படுக்கின்றன... மேலும், எங்களது உடல் ஜூம் செய்யப்படுகின்றன.

ஒரு சிலர் செய்யும் இந்த நடவடிக்கை அவமரியாதைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

இன்ஸ்டா ஸ்டோரி
இன்ஸ்டா ஸ்டோரி

நாங்கள் இங்கே கலைக்காகவும், சினிமாவிற்காகவும் இருக்கிறோம்.

வேண்டுமென்றே இப்படிப் பரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களைக் கண்டிக்கிறோம். அவைக் கண்ணியத்தை மீறுவதாகும்.

இதைப் பொறுத்துக்கொள்ளவோ முடியாது.

இந்த மாதிரியான நிகழ்வுகள் தொழில்முறை சார்ந்தும், அடிப்படை மரியாதை மற்றும் கண்ணியம் சார்ந்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கான எல்லையை நிர்ணயிக்க வேண்டும். இந்தப் பிரச்னை நடந்த ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் துணை நிற்கிறோம்".

`செக் கொடுத்து, யோகி பாபு சார் சொன்ன விஷயம்' - மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா மனைவி தனிஷ் பாத்திமா

' ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மகளின் கல்வி செலவிற்காக காசோலை வழங்கியிருக்கிறார் யோகி பாபு. சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்திருக்கும் 'கெணத்த கா... மேலும் பார்க்க

ஹைக்கூ கவிதைப் போட்டி: "லிங்குசாமி கவிதைகளில் சுஜாதாவின் தாக்கம் இருக்குதுனு..." - வியக்கும் கவிஞர்

கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி வரும் ஹைக்கூ கவிதைப் போட்டியை 5 ஆம் ஆண்டாக அறிவித்திருக்கிறார்கள்.சமீபத்தில் இந்தாண்டிற்குரிய போட்டி குறித்த அறிவிப்பையும் வெளிய... மேலும் பார்க்க

`சிவகார்த்திகேயனுக்கு படத்தை விளம்பரப்படுத்த பொருளாதாரம் இருக்கிறது, ஆனால்.!' - ஆரி ஆதங்கம்

நடிகர் ஆரி நடிப்பில் உருவான ‘ஃபோர்த் ப்ளோர்’ திரைப்படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது. மனோ கிரியேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரித்துள்ள இப்படத்தை எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கியிருக்கிறார்... மேலும் பார்க்க

`வீட்டை கட்டுங்க அண்ணே. அப்பறம் பார்த்துக்கலாம்' - ஏ.எல் விஜய் செய்த உதவி குறித்து எம்.எஸ்.பாஸ்கர்

இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படம் வெளியாக இருக்கிறது. புதுமுக நடிகர்களை வைத்து எடுத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மதும்கேஷ், ஜியா சங்கர... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: "கத்தாரில் நான் சென்றதுதான் கடைசி விமானம்" - சந்தோஷ் நாராயணன் பதிவு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் போர் தொடுத்து வருகிறது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த... மேலும் பார்க்க