செய்திகள் :

"நமக்கு அவார்டுலாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்'னு நினைச்சுக்கிட்டேன், ஆனா..!"- விகடன் மேடையில் பிரதீப்

post image

தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை 'டிராகன்', 'டியூட்' படங்களுக்காகப் பிரதீப் ரங்கநாதன் வென்றார்.

விருது பெற்ற பிறகு பேசிய பிரதீப் ரங்கநாதன், "நான் நடிக்க வரும்போதே நமக்கு அவார்ட்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்'னு நினைச்சுக்கிட்டேன்.

சினிமா விகடன் விருது விழாவில்...
சினிமா விகடன் விருது விழாவில்...

ஏன்னா நான் நடிக்கிறது மாஸ் கமர்ஷியல் படங்கள். இதுதான் நான் நடிக்கணும்'னு ஆசையும் படுறேன். அதைத் தாண்டி இங்கு இருக்கக்கூடிய டேலன்ட்ஸ்க்கு நடுவுல எனக்கு எப்படி அவார்டு வரும்'னு எனக்கே தெரியும்.

அதனால எனக்கு அவார்டுலாம் வராதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால் 'லவ் டுடே' படத்தில நடிக்கும்போது மட்டும் சிறந்த அறிமுக நடிகருக்கான அவார்டு கிடைக்கும்'னு நினைச்சேன்.

விகடன் அவார்டுக்காகவும் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு அவார்டு கிடைக்கல. இதோட கனவு முடிஞ்சிருச்சு... இதுக்கு மேல அவார்டுலாம் கிடைக்காதுன்னு ஃபிக்ஸ் ஆயிட்டேன். ஆனா இந்த வருஷம் எனக்கு சிறந்த நடிகருக்கான அவார்டு கிடைச்சிருக்கு.

பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன்

அதுவும் ஒரு படத்துக்கு இல்ல, இரண்டு படத்துக்கு... வாழ்க்கையில நம்ம போட்ட கால்குலேஷன் வொர்க் அவுட் ஆகலனாலும், வாழ்க்கை நமக்கு போடுற கால்குலேஷன் நமக்கு ஒரு இடத்தைக் கொடுக்கும். அதனால எதாச்சும் மிஸ் ஆனா மனம் தளர வேணாம். கண்டிப்பா ஒருநாள் கிடைக்கும்" என்று பேசினார்.

"டீஸர், ட்ரெய்லரைப் பார்த்தே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; ஆனால்..."- விமர்சனங்கள் குறித்து மாதவன்

திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜிடிஎன்’ (GDN). ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வ... மேலும் பார்க்க

Mamitha: "ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகத் தன் பயணத்தைத் தொடங்கியவர் இன்று..."- மமிதாவைப் புகழ்ந்த சூர்யா

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

சூர்யா வாழ்க்கையில் நடந்த சம்பவம்... 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் ரீ-கிரியேட் செய்த வெங்கி அட்லுரி!

வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டெய... மேலும் பார்க்க

`கருத்து வேறுபாடு, பட்ஜெட் பிரச்னைகளால் அருண்ராஜா காமராஜுடன் படம் இல்லை' - விஷ்ணு விஷால் அறிவிப்பு

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடன் நடித்துத் தயாரிக்க இருந்த திரைப்படம் கைவிடப்படுகிறது என்று நடிகர் மற்றும் இயக்குநர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்."அருண்ராஜா காமராஜுடன் நான் இணையவிருக்க... மேலும் பார்க்க

"முதலில் நான் பணத்திற்காகத்தான் நடிக்க வந்தேன், ஏனென்றால்..!"- நடிகர் சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.'லக்கி பாஸ்கர்' படப் புகழ் வெங்கி அத்லூரி இயக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விக்ரம்; கிளம்பிய சர்ச்சை - வனத்துறை அதிகாரிகள் விசாரணை!

நடிகர் சியான் விக்ரம், 'லார் கிப்பான்' என்ற அரிய வகை வெளிநாட்டு குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குடன் விளையாடி மகிழும் வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ... மேலும் பார்க்க