செய்திகள் :

‘சுத்தமான பெட்ரோல் உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்?’ - E20 விவகாரத்தில் பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

post image

இந்தியாவில் E20 பெட்ரோல் அறிமுகப்படுத்தியதில் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்துகொண்டே இருக்கின்றன.

E20 பெட்ரோலால் வாகனங்களின் செயல்திறன் பாதிப்படைகிறது என்கிற விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இந்த விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் பதில்கள் இங்கே...

பாஜகவின் மத்திய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா:

"இந்தியா தனது மொத்த தேவையில் 20 சதவீத கச்சா எண்ணெயை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதி 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.

பிரதமர் மோடி பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பதைப் பற்றிப் பேசும்போது மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

ஜனார்தன் மிஸ்ரா
ஜனார்தன் மிஸ்ரா

கலப்படம் இல்லாத சுத்தமான பெட்ரோல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

சுத்தமான பெட்ரோல் என்ன உங்கள் அப்பா வீட்டிலிருந்தா வரும்? நாட்டில் சுத்தமான பெட்ரோலே இல்லாதபோது, அது வேறு எங்கிருந்துதான் வரும்?"

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி:

"இன்று நாட்டின் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் E20 எரிபொருள் கிடைக்கிறது.

எத்தனால் கலந்து எரிபொருளை விரும்பாதவர்கள் 100 சதவீதம் சுத்தமான பெட்ரோலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அவர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும்."

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி:

"நமது உயிரி எரிபொருள் கலப்புத் திட்டம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உங்களில் சிலர் E20 பற்றியும், அதைச் சுற்றி சிலர் சர்ச்சை உருவாக்க முயல்வதைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கலாம்.

தினமும் சுமார் 6 முதல் 7 கோடி வாடிக்கையாளர்கள் பெட்ரோல் பங்க்குகளுக்குச் செல்கிறார்கள். கலப்படம் என்று பார்த்தால், அது எதிலும் நடக்கலாம்.

நீங்கள் சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, மண்ணெண்ணெய், டீசல் அல்லது வேறு எதிலும் கலப்படம் நடக்க வாய்ப்புள்ளது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

அனைத்துப் பரிசோதனைகளிலும் ஒரு நாளைக்கு 2,000 பெட்ரோல் பங்க்குகளில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார்கள்.

தினமும் 6 முதல் 7 கோடி மக்கள் வந்து செல்லும் 1,07,000 பெட்ரோல் பங்க்குகளில், வெறும் நான்கு வழக்குகளை மட்டுமே அவர்கள் கண்டறிந்தனர்.

எனவே, யாரோ ஒருவர் எதையோ அதன் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல் சூழலுக்கு அப்பாற்பட்டுப் பேச முயற்சிக்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது."

E20 பெட்ரோல்: `கிரீன் நேஷன் முன்னெடுப்பா... வாகனங்களுக்கு பேராபத்தா?' - கள நிலவரம் என்ன? | ஓர் அலசல்

எத்தனால் பெட்ரோலும் - எதிர்ப்பும்மத்திய அரசு 2014 முதல் கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், பெட்ரோலில் எத்தனால் கலப்பை மேற்கொண்டு ... மேலும் பார்க்க

'135 கிலோ உடல் எடையை 89 கிலோவாகக் குறைந்தது எப்படி?'- ரகசியம் பகிர்ந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றுக் காலத்திற்கு முன்பு 135 கிலோ எடை இருந்தார். ஆனால் இப்போது அவரது எடை 89 கிலோவாகக் குறைந்து இருக்கிறது. எப்படி இந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்தார் என்பது க... மேலும் பார்க்க

‘ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்’ ட்ரம்ப் சொல்கிறார்; இருந்தும், அங்கே போக்குவரத்தில் சிக்கல்!

ஈரான் போரில் எத்தனை முறை மீண்டும் மீண்டும் தாக்குதல் தொடங்கினாலும், அதன் வழி வந்து முடிவதும், மையமாக மாறுவதும் ஹார்முஸ் நீர்ச்சந்தி தான். ஈரானும், அமெரிக்காவும் போர்களத்தில் மோதிக்கொள்வதை விட, ஹார்முஸ... மேலும் பார்க்க

பனியன், டவுசருடன் குறைகளைக் கேட்ட ஆம் ஆத்மி MLA; "பதவியைப் பறிக்கணும்" - டெல்லி முதல்வர் கண்டனம்

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள கிராரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அனில் ஷா. சமீபத்தில் அனில் ஷா தனது தொகுதியில் மக்களிடம் குறைகளைக் கேட்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்க... மேலும் பார்க்க

`சட்டமன்றத்தில் அதிமுகவை விழுங்க நினைக்கும் தவெக?' - எடுபடுமா விஜய்யின் மாஸ்டர் ப்ளான்?

தவெகவுக்கு கைகொடுக்குமா?மாஸ்டர் ப்ளான்தேர்தலுக்கு முன்பாக பொதுக்கூட்ட மேடைகளிலும் பிரசாரங்களிலும் அதிமுகவை விமர்சிக்காமல், அதிமுகவின் அடையாளமாக திகழும் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிக் க... மேலும் பார்க்க

ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசை கூட்டம்; பூட்டிக் கிடந்த கழிப்பறைகள்; அவதிக்குள்ளான பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கல்யாண திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினந்தோறும் ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலாவுடன் முக்கிய நாட்களில் அமாவா... மேலும் பார்க்க