செய்திகள் :

'நம்பிக்கையில்லா தீர்மானம்! - முன்னெச்சரிக்கையாக ரெசார்ட்டில் எம்.எல்.ஏக்களை திரட்டும் CM விஜய்?

post image

சென்னை தனியார் விடுதியில் இன்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் முதல்வர் விஜய். நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வாய்ப்பிருப்பதால் அதற்கு முன்னெச்சரிக்கையாகத்தான் இந்த கூட்டம் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

CM Vijay
CM Vijay

கடந்த மே 13 ஆம் தேதி சட்டமன்றத்தில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்தது. மரபுப்படி பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு பிறகே அடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பர். அந்தவகையில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்து நவம்பர் 13 ஆம் தேதியோடு ஆறு மாத காலம் நிறைவடைகிறது.

இந்நிலையில்தான், முன்னெச்சரிக்கையாக தவெகவின் அத்தனை எம்.எல்.ஏக்களையும் சென்னை வரவழைத்து முதல்வர் சந்திக்கவிருக்கிறார். ஈ.சி.ஆரில் உள்ள தனியார் விடுதியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒவ்வொரு எம்.எல்.ஏவாக அலைபேசியில் தொடர்புகொண்ட அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், தீபாவளி வாழ்த்துகளோடு புதன் கிழமை ஒரு முக்கிய கூட்டம் இருக்கிறது சென்னை வந்துவிடுங்கள் எனவும் கூறியிருக்கிறார். கூட்டம் எங்கே நடக்கும் என்பதை பின்னர் தெரிவிக்கிறோம் என தலைமை சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதிலேயே பல எம்.எல்.ஏக்களும் குழப்பமடைந்தனர்.

கூட்டம் நடக்கவிருக்கும் ரெசார்ட்
கூட்டம் நடக்கவிருக்கும் ரெசார்ட்

வழக்கமாக இதேமாதிரியான கூட்டங்கள் அனைத்தும் பனையூரில்தானே நடக்கும்...இப்போது என்ன புதிதாக என தங்களுக்குள்ளேயே மாறி மாறி போன் அடித்து பேசியும் எதுவும் புலப்படவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் நேற்றிரவே சென்னை வந்தடைந்துவிட்டனர். ரீச் ஆகிவிட்ட தகவலை தலைமைக்கு பாஸ் செய்த போதும் கூட்டம் நடக்கும் லொகோஷனை மட்டும் தலைமை சொல்லவே இல்லை. இன்று காலை வரைக்குமே எம்.எல்.ஏக்களுக்கு எங்கே எத்தனை மணிக்கு கூட்டமென தெரியப்படுத்தவே இல்லை. காலை 9 மணிக்குதான் ஈ.சி.ஆரில் ஒரு ரெசார்ட்டில் 11 மணிக்கு கூட்டமென தகவல் கொடுத்திருக்கின்றனர். சிட்டிக்குள் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் இப்போது ஈ.சி.ஆருக்கு வண்டியை விரட்டிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ரெசார்ட்டில் 3 நாட்களுக்கு அறைகள் புக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வரவே, என்னதான் நடக்கப் போகிறது...ஏன் இவ்வளவு ரகசியம் என்கிற குழப்பத்துடனேயே எம்.எல்.ஏக்கள் ஈ.சி.ஆருக்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர்கள் சிலர், 'நவம்பர் 13 க்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம். அதை மையமாக வைத்து எங்களின் எம்.எல்.ஏக்களுக்கு திமுகவினரும் அதிமுகவினரும் தூண்டில் போட முயல்கின்றனர். இதுசம்பந்தமாக எம்.எல்.ஏக்களை எச்சரித்து முக்கியமாக சில அறிவுரைகளையும் முதல்வர் வழங்கவிருக்கிறார். அந்தத் தகவல்கள் வெளியில் கசியக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி அலுவலகத்தில் கூட்டத்தை நடத்தாமல் ரெசார்ட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது' என்றனர்.

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" - ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோக... மேலும் பார்க்க

அஜித் தோவல் மீது குற்றச்சாட்டு! அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய சம்மன் - இந்தியா என்ன சொல்கிறது?

கடந்த மாதம், அமெரிக்க வெளியுறவுத் துறை வழங்கிய நீதிமன்றச் சம்மன் தற்போது இந்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணூன் தொடர்ந... மேலும் பார்க்க

'அட்டாக் பரந்தாமன்' லைப்ரரி மேட்டரை விட்றாதீங்க! - தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு புது அசைன்மெண்ட்!

சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' அலுவலகத்தில் தவெகவின் செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

`ரெஸ்டோ பார்களில் கவர்ச்சி நடனம்... 5 மாதங்களில் 24 கொலைகள்..! - புதுச்சேரி அரசைச் சாடும் திமுக

`2025-ல் ஆண்டில் 25 கொலைகள், 2026-ல் 24 கொலைகள்!’புதுச்சேரி திமு.க அமைப்பாளர் சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஆன்மிகத்திற்கும், சுற்றுலாவிற்கும் புகழ்பெற்ற புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில மாதங்... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘தமிழகத்தில்... மேலும் பார்க்க

'ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானிய முதல் பெண் IAS வரை பாதிக்கப்படுறாங்க'- உதயநிதி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. ஆனால்... மேலும் பார்க்க