செய்திகள் :

'ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானிய முதல் பெண் IAS வரை பாதிக்கப்படுறாங்க'- உதயநிதி

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது.

ஆனால் ஆட்சியருக்கு எதிராக புகார் அளித்ததால் தன் மீது தவறான தகவல் பரப்புவதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கூறியிருக்கிறார்.

இந்தச் சம்பவத்தில் அருள் விக்னேஷிற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.

குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.

நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.

குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.

மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

‘தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு ஐசியுவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளது'- ஸ்டாலின் விமர்சனம்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி கோமாவிலும் உள்ளதாக தவெக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘தமிழகத்தில்... மேலும் பார்க்க

`அரசு அதிகாரியோ... சாதாரண பெண்ணோ... தமிழ்நாட்டில் பாதுகாப்பே இல்லை..!' - கனிமொழி சாடல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

50000 பேரை அகதிகளாக்கிய எத்தியோப்பிய வன்முறை! எல்லை யாருக்கு சொந்தம்; வெடித்த மோதல்; பின்னணி என்ன?

துப்பாக்கிச்சூட்டிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டு வெளியேறும் குடும்பங்கள்... வழியிலேயே குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள்... உணவின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள்... எத்தியோப்பியாவின்... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? ``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

"எங்கள் முதல்வர் விஜய் பாணியில் சொல்லட்டுமா?" - பெண் ஆட்சியர் விவகாரத்தில் TVK MLA சொன்ன பதில் என்ன?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்க... மேலும் பார்க்க