செய்திகள் :

"எங்கள் முதல்வர் விஜய் பாணியில் சொல்லட்டுமா?" - பெண் ஆட்சியர் விவகாரத்தில் TVK MLA சொன்ன பதில் என்ன?

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.பி கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ``குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

கனிமொழி
கனிமொழி

இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்திருந்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷிடம், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, ``அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை. ஏன் இப்படி ஒரு பொய்யான தகவலை சோஷியல் மீடியாவில் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

அப்படி உண்மையாக நடைபெற்றிருந்தால் என்ன நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கட்டும். எங்கள் சி.எம் சார் பாணியில் சொல்ல வேண்டுமானால், இக்னோர் தி நெகட்டிவ். தவறான தகவலுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அது உண்மையாக நடந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.

என் பெயரையும், என் கட்சியின் பெயரையும் தவறாகப் பரப்புவதற்காக முழு நேரமும் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னுடைய மக்கள் பணியை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

எப்போதும் போல ஆய்வுக்குச் செல்கிறேன். இங்குதான் இருக்கிறேன். மக்களிடம் கருத்துகள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். இப்படியான அவதூறு கருத்துகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறேன். கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி ரியல் எஸ்டேட் தொழில்தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றிருக்கிறது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

அதை நான் கண்டுபிடித்து முதல்வரிடம் ஆதாரப்பூர்வமாகக் கொடுத்துவிட்டேன் என்பதற்காக எதிர்க்கட்சிகளும், ரியல் எஸ்டேட் உரிமையாளர்களும் என் பெயரைக் களங்கப்படுத்த நினைக்கிறார்கள். நான் எப்போதும் மக்கள் பணியை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மக்களுக்கான உண்மையான பணி செய்வதற்காக மட்டும்தான் நாங்கள் வந்திருக்கிறோம். முன்பெல்லாம் தி.மு.க, அ.தி.மு.க என்ற இரண்டு கட்சிகள்தான் இருந்தன. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு எதிர்க்கட்சிகள்தான். இதை யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? ``யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ராஜ்மோகன்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்க... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் விஜய்?" - இபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. எம்எல... மேலும் பார்க்க

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" - சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? ``ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" - ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க