செய்திகள் :

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

post image

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும், இவற்றை கொள்முதல் செய்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுத்தாளர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து பெரியார் நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குள்ளான அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தங்கள் அகற்றப்பட்டன.

புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய பதிப்பகங்களிடம் இருந்து வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, அதற்காக வழங்கப்பட்ட தொகை, பரிந்துரைந்தவர்கள் பெயர்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் விஜய்?" - இபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. எம்எல... மேலும் பார்க்க

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது" - சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ்? ``ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கும்" - ஜோதிமணி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கி... மேலும் பார்க்க

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி ... மேலும் பார்க்க

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' - எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை வருமாறு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கிறார்.CM Vijayதீபாவளி தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தவெக தலைமையிலிருந்து... மேலும் பார்க்க