செய்திகள் :

நயினார் சர்ச்சை பேச்சு: ``வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - கொதிக்கும் அமைச்சர் கீர்த்தனா

post image

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் தன் பேச்சுக்கு ``எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்" என விளக்கமளித்திருந்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆனாலும் தவெக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் அமைச்சர் கீர்த்தனா தன் எக்ஸ் பக்கத்தில், ``பெண்களின் மாண்பையும், தாய்மையின் புனிதத்தையும் மதிக்கத் தெரியாத வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தாய்மார்களை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது, தாய்மார்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு மிகவும் தரக்குறைவானது.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். கொள்கைகளை எதிர்க்கலாம். ஆனால், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களின் கண்ணியத்தையும் தாய்மையின் பெருமையையும் இழிவுபடுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர், தனது ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியத்தையும் பொறுப்புணர்வையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், இன்று அவர் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்தின் எல்லைகளையே மீறியுள்ளன.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் பெண்களின் சுயமரியாதையை அவமதிக்கும் எந்தவொரு பேச்சாக இருந்தாலும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பெண்களின் கண்ணியத்திற்கும், தாய்மையின் மாண்பிற்கும் எதிரான இத்தகைய பேச்சுகள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். தரக்குறைவான இப்பேச்சுக்காக நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களின் கண்ணியத்தை அரசியல் லாபத்திற்காகக் கொச்சைப்படுத்தும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``நயினார் நாகேந்திரன் பேசிய கருத்து அருவருக்கத்தக்கது" - பாஜக நிர்வாகி குஷ்பு

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள், நயினார் நாகேந்திரன் அவர்களே..!" - அமைச்சர் ரமேஷ்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

"தமிழ்நாடு முழுக்கவே வம்பு இழுத்து வைத்திருக்கிறேன்!"- சொல்கிறார் அமைச்சர் பிரபு

பாரம்பர்ய அரசியல் குடும்பத்திலிருந்து த.வெ.க-வுக்குள் அடியெடுத்துவைத்த டாக்டர் து.க.பிரபு, காரைக்குடி தொகுதியில் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்று, அமைச்சராகவும் பொ... மேலும் பார்க்க

'தாய் மீதும், தாய் நாட்டின் மீதும்...' - முதல்வர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு நயினார் விளக்கம்

"சட்டமன்றத்தில் அப்பாவைக் காணோம் எனத் தேடுபவர்களின் ஆட்சி நடக்கிறது. வீட்டில் போய் அம்மாவிடம் கேட்டால்தானே அப்பா யார் என்று சொல்வார்? சட்டமன்றத்தில் தேடினால் எப்படி?" என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார்... மேலும் பார்க்க

"திமுக - அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பில்லை" - திமுக எம்.பி கனிமொழி பளீச்

அதிமுக - திமுக கூட்டணி என்பது எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லாதது எனத் திமுக எம்.பி கனிமொழி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். செய்தியாள... மேலும் பார்க்க

'டார்கெட் வட இந்தியா; பிரண்ட்லி பாமக; கலக்கத்தில் அமைச்சர்' - முதல்வரின் சுதந்திர தின விழா ஹைலைட்ஸ்!

ஜார்ஜ் கோட்டையில் முதல் முறையாகக் கொடியேற்றியிருக்கிறார் முதல்வர் விஜய். கொடியேற்றிய கையோடு அவர் ஆற்றிய உரையிலும் அந்த விழாவிலும் அத்தனை பொலிட்டிக்கல் மெசேஜ்கள் இருந்தன. அவற்றின் ஹைலைட்ஸ் இங்கே.CM Vij... மேலும் பார்க்க